திருச்சியில் மருத்துவ உபகரணங்கள் இல்லாமல் அறுவை சிகிச்சைக்கு தயாரான மருத்துவமனை - பாதிக்கப்பட்ட நபர் திருச்சி ஆட்சியரிடம் புகார்

hospital surgery medical equipment trichy victim collector

திருச்சியில் மருத்துவ உபகரணங்கள் இல்லாமல் அறுவை சிகிச்சைக்கு தயாரான மருத்துவமனை  - பாதிக்கப்பட்ட நபர் திருச்சி ஆட்சியரிடம் புகார்

திருச்சி திருவானைக்காவல் பகுதியில் வசித்து வருபவர் அஷ்டுபூஷண்  என்கிற ஜீவா இவர் இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது விபத்து ஏற்பட்டது. விபத்தை தொடர்ந்து காயம் ஏற்பட்டது சுகப்படுத்தும் வகையில் நாட்டு மருத்துவத்தை எடுத்து வந்தார்.

அதில் பயன் கிடைக்காததால் திருச்சி சமயபுரம் அருகில் உள்ள தனலட்சுமி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றார். ஆனால் அவர்கள் அதிக அளவில் பணம் செலுத்தக் கூறியதால் தங்களிடத்தில் அவ்வளவு பொருளாதாரம் இல்லை என்று கூறி வந்து விட்டனர்.

ஆனால் மருத்துவமனையில் இருந்து இவரை தொலைபேசியில் அழைத்த நிர்வாகம் குறைந்த செலவில் மருத்துவம் பார்ப்பதாக கூறி அழைத்தனர். தொடர்ந்து ஜீவா அங்கு சிகிச்சைக்காக சென்றார். இரண்டு நாள் தொடர் சிகிச்சைக்குப் பின்னர் அடுத்த நாள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவ தெரிவித்ததால் அதற்கு தன்னை தயார் படுத்திக் கொண்டார்.

காலை மயக்க சிகிச்சை அளிக்கும் நிபுணரால் மயக்க மருந்து செலுத்தப்பட்டு அறுவை சிகிச்சைக்கு தயாராக இருக்கிற பொழுது நீண்ட நேரம் ஆகியும் அறுவை சிகிச்சை நடைபெறவில்லை இதை தொடர்ந்து அவரது உறவினர்கள் கேட்டதற்கு அறுவை சிகிச்சை செய்வதற்கான காலில் வைக்கக்கூடிய பிளேட்டுக்கான உபகரணங்கள் தங்களிடம் இல்லை என்றும் அடுத்த நாள் செய்து கொள்ளலாம் என்று அவர்களை சமாதானப்படுத்தினர். 

இதன் காரணமாக அவர்களுக்குள் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து தங்களுக்கு மருத்துவ சிகிச்சை வேண்டாம் எனக் கூறி அங்கிருந்து அவர்கள் வெளியேறினர். 
அங்கு தங்களிடம் பணம் வாங்கிவிட்டு சரியான முறையில் சிகிச்சை செய்யாததால் இது குறித்து திருச்சி மாவட்ட சமயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

ஆனால் காவல்துறையினர் புகாருக்கு எந்தவித நடவடிக்கை எடுக்காமலும் ஒரு பெண் அதிகாரி அந்த மருத்துவமனை மணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினர் கதிரவனுக்கு சொந்தமானது. எனவே, அவரிடம் பகைத்து கொள்ளாதீர்கள்  என்று கூறியுள்ளார். ஆனால் பாதிக்கப்பட்ட ஜீவா அவரது தாய் மற்றும் வழக்கறிஞர்கள் இன்று காலை திருச்சி மாவட்ட ஆட்சியர் சந்தித்து புகார் மனு அளித்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம்

அறிய... 

https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய.... 

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision