திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி நத்தம் சாலையில் சிவகங்கை மாவட்டம்
சிங்கம்புணரியைச்
சேர்ந்த நாகலிங்கம் மகன் நெடுஞ்செழிய பாண்டியன் 45 வைத்தியசாலை வைத்து கை ,கால் சுளுக்குகளுக்கு கட்டு கட்டும் தொழில் செய்து வருகிறார். இவரது நுட வைத்தியசாலையின் எதிர் புறத்தில் அழகன் – 56 என்பவர் நுட வைத்தியசாலை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் இருவருக்கும் தொழில் போட்டியின் காரணமாக நேற்று காலை வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் நெடுஞ்செழிய பாண்டியன் அழகனைப் பார்த்து உன்னை துப்பாக்கியால் சுட்டு விடுவேன் என ஏர்கன் ஒன்றை வைத்து மிரட்டியுள்ளார்.
இதனையடுத்து அழகன் உடனடியாக துவரங்குறிச்சி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு நெடுஞ்செழியனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments