Site Logo mobile
Search Icon
Mobile Gif
Health

வெப்ப அலைகள் மனித ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது

வெப்ப அலை, இனி பேரிடராக அறிவிக்கப்படும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கூறியுள்ளார். பருவ நிலை மாற்றத்தால் தமிழகத்தில் வெயில் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், வெப்ப அலை வீச்சினை மாநிலம் சார்ந்த பேரிடராக அறிவிக்கப்படும் என அமைச்சர் ராமசந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், மாநில பேரிடர் நிவாரண நிதி விதிப்படி வெப்ப அலையை தடுக்க நடவடிக்கை எடுப்பதுடன், உரிய நிவாரணமும் வழங்கப்படும் எனக் கூறியுள்ளார்.

உலக வானிலை அமைப்பின் அறிக்கையானது அடுத்த 5 ஆண்டுகளின் சராசரி ஆண்டு வெப்பநிலையானது 1850 ௭ 1900 இடைப்பட்ட காலத்தில் நிலவிய சராசரி ஆண்டு வெப்பநிலையவிட 1.1०C முதல் 1.9०C அளவுக்கு உயர்ந்து காணப்படும் என எச்சரித்துள்ளது. இந்த வெப்ப அளவை நாம் உணர்ந்துகொள்ள வேண்டுமென்றால் தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மற்றும் மே ஆகிய மாதங்களில் வெப்ப அலையின் தாக்கம் நிலவிய 15க்கும் மேற்பட்ட நாட்களில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2०C முதல் 5०C வரை அதிகமாக இருந்து நாம் நினைவுகூர வேண்டும்.

கடந்த 12 மாதங்கள் (ஜூன் 2023 & மே 2024) பதிவான உலகளாவிய சராசரி வெப்பநிலையும் மிக உயர்ந்தே இருந்து. இது 1850-1900 காலத்திற்கு முந்தைய சராசரியைவிட 1.63०C அதிகமாக இருந்ததாக கோப்பர்நிக்கஸ் காலநிலை மாற்றம் ERA5 தரவுத்தொகுப்பு தெரிவிக்கிறது. காலநிலை மாற்றம் சுகாதார கட்டமைப்புகளை சீர்குலைக்கும். காலநிலை மாற்றம் தீவிர பேரிடர்களில் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தும் வெப்ப அலைகள் பாதிப்புகளை கட்டுப்படுத்த உதவும்

காலநிலை தகவல்கள் மற்றும் சேவைகள் உலக வானிலை அமைப்பு (WMO) தனது வருடாந்திர காலநிலை சேவைகளின் நிலை அறிக்கையை (State of Climate Services) வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை மனித ஆரோக்கியத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. மனித ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வில் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை சுட்டிக்காட்டும் இந்த அறிக்கை, வானிலை முன்னறிவிப்புகளுக்கான ஐரோப்பிய வானிலை சேவை மையம் (European Centre for Medium-Range Weather Forecasts (ECMWF) மற்றும் கோபர்னிகஸ் காலநிலை மாற்றம் சேவை (சி 3 எஸ் *)( Copernicus Climate Change Service (C3S*), ஆகியவற்றின் பங்களிப்புகளை உள்ளடக்கியது.

காலநிலை மாற்றம்

உலகம் முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் வெப்பமடைந்து வரும் நிலையில், இது மனித ஆரோக்கியத்தை எப்படி அச்சுறுத்துகிறது என்பதை விளக்குகிறது இவ்வறிக்கை. குறிப்பாக சுகாதாரத்துறையில் பல பத்தாண்டுகளாக நாம் அடைந்துள்ள முன்னேற்றத்தை முடக்கி நம்மைப் பின்னுக்குத் தள்ளும் அளவிற்கு காலநிலை மாற்றம் மனித சுகாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அறிக்கை குறிப்பிடுகிறது.

மிகத் தீவிரமான வானிலை நிகழ்வுகள் மற்றும் மோசமான காற்றின் தரம், மாறிவரும் தொற்று நோய் முறைகள் மற்றும் உணவு மற்றும் நீர் பாதுகாப்பின்மை ஆகியவற்றை எதிர்கொள்ள காலநிலை தகவல் மற்றும் சேவைகளின் உதவி எந்தளவிற்குப் பயனுள்ளதாக இருக்கும் என்பதை இவ்வறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

”நம் மொத்த புவிக்கோளமும் நடப்பாண்டு முழுவதும் வெப்ப அலைகளை சந்தித்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் எல் நினோவின் தொடக்கம், முந்தைய வெப்பநிலை உச்சங்களை மேலும் முறியடிப்பதற்கான வாய்ப்பை பெரிதும் அதிகரிக்கும், இது உலகின் பல பகுதிகளிலும் கடலிலும் அதிக தீவிர வெப்பத்தைத் தூண்டி நாம் எதிர்கொண்டு வரும் சவாலை மேலும் இன்னும் அதிகமாக்குகிறது” என்று உலக வானிலை அமைப்பின் பொதுச்செயலாளர் பேராசிரியர் பெட்டேரி டாலஸ் கூறுகிறார்.

காலநிலை பேரிடர்களின் தாக்கம்

நடுத்தர அல்லது பெரிய அளவிலான பேரிடர் நிகழ்வுகளின் எண்ணிக்கை 2030 க்குள் ஆண்டுக்கு 560 அல்லது ஒவ்வொரு நாளும் 1.5 பேரிடர் நிகழும் என்கிற நிலைய எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது. அறிக்கையில் மேற்கோள் காட்டப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, வரையறுக்கப்பட்ட பேரிடர் முன்னெச்சரிக்கை வசதிகள்(early warning coverage have ) கொண்ட நாடுகளில் ஏற்படும் பேரழிவால் ஏற்படும் உயிரிழப்புகளைக் காட்டிலும் பேரிடர் முன்னெச்சரிக்கை வசதிகள் Disney நாடுகளில் எட்டு மடங்கு அதிகமான உயிழப்புகள் ஏற்படும்.காலநிலை மாற்றம் மற்றும் அதன் தீவிர தாக்கங்கள் அனைத்தையும் எதிர்கொண்டு வரும் இந்திய மாநிலங்களில் தமிழ் நாடும் ஒன்று. பொது சுகாதாரத்துறையில் இந்தியாவில் பிற மாநிலங்களைக் காட்டிலும் வலிமையான கட்டமைப்பைக் கொண்டது தமிழ் நாடு.

காலநிலை மாற்றத்தின் தாக்கத்திலிருந்து தமிழ் நாட்டைப் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் தமிழ் நாடு அரசு காலநிலை சேவைகள், தரவுகளைத் திறம்பட கையாண்டு சுகாதார பாதிப்புகளைக் குறைக்கும் நடவடிக்கைகளை  வேகப்படுத்த வேண்டும்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *