திருச்சி மாவட்டம் மணப்பாறை போக்குவரத்து ஆய்வாளராக பணிபுரிபவர் கணேசன். இவர் மணப்பாறை பகுதியை ஆய்வு செய்து கொண்டிருந்த போது மணப்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் பள்ளிக்குச் சென்ற சிறுவன் ஒருவன் ஒற்றை காலில் நடந்து செல்வதை கண்ட அவர் அவனிடம் விசாரித்தார்.
அப்போது அவன் பெயர் கவின் (13) வையம்பட்டி பகுதி புறத்தாக்குடியில் இருந்து தினமும் பேருந்தில் பயணம் செய்து மணப்பாறை அரசு மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருவதாகவும் கூறியுள்ளான்.
மேலும் அவனது தாய் தந்தை இருவரும் இல்லாத நிலையில் பாட்டி எலிசபெத் ராணி வளர்த்து வருவது தெரிய வந்தது. சிறுவனின் நிலைமையை புரிந்து உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் போக்குவரத்து காவல் ஆய்வாளரின் முயற்சியால் கோயம்புத்தூரில் உள்ள (ரவுண்ட் டேபிள் அசோசியேஷன் 31) தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் அச்சிறுவனுக்கு சுமார் 20,000 மதிப்புள்ள செயற்கைக்கால் பொருத்தப்பட்டது.
மேலும் அச்சிறுவனின் தேவைக்கான மற்ற அனைத்து செலவுகளையும் ஆய்வாளர் செய்துள்ளார். மேலும் அச்சிறுவனுக்கு உதவியாக சமூக ஆர்வலர்கள் அசோக் குமார் மற்றும் தேவேந்திரன் உதவியுடன் கோயம்புத்தூர் அழைத்துச் சென்று செயற்கை கால் பொருத்தப்பட்டு மீண்டும் அவனது சொந்த ஊரான வையம்பட்டி அருகே உள்ள புறத்தாகுடியில் அவனது பாட்டி வீட்டில் கொண்டு சென்று விட்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments