78 வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருச்சி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் தேசிய கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிலையில், திருச்சி மாவட்டம் அதவத்தூர் கிராம மக்கள் தங்களது வீடுகளில் ஒருபுறம் தேசிய கொடியையும், மறுபுறம் கருப்புக்கொடியை கட்டி வைத்துள்ளனர். இந்த கிராம மக்களின் கோரிக்கையான தேசிய அளவில் கிராமங்களில் உள்ள விவசாய தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 100 நாள் வேலை வாய்ப்புத்திட்டம் பறிபோய்விடும்.

வீட்டு வரி, சொத்து வரி, குப்பை அகற்றும் கட்டணம், குடிநீர் கட்டணம் உள்ளிட்டவை உயர்ந்துவிடும். எனவே, திருச்சி மாநகராட்சியுடன் அதவத்தூர் கிராமத்தை இணைக்கக்கூடாது என கிராம மக்கள் வலியுறுத்தி சுதந்திர தினமான இன்று தேசிய கொடியும், கருப்பு கொடியையும் ஏற்றி வைத்துள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision




            
            
            
            
            
            
            
            
            
            


Comments