திருச்சி மாவட்டம், பெருவளப்பூர் – நம்பிக்குறிச்சிக்கு இடையில் மாரியாகுளம் என்ற பகுதியில் இருளர் மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களது வாழ்வாதாரத்திற்காக கரிமூட்டம் போடும் தொழிலை செய்து வருகின்றனர்.
கடந்த 15 வருடத்திற்கும் மேலாக பனை ஓலை குடிசையில் வசித்து வரும் இவர்கள் குடிநீர், மின்சாரம், உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதியும் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். இந்த மக்களின் நிலைமையை உணரும் சமூக ஆர்வலர்கள் அவ்வப்போது தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக காணக்கியநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் பெரியசாமி இருளர் மக்களின் பள்ளி குழந்தைகளுக்கு இலவசமாக குடைகள் வழங்கினார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments