இன்று 04.08.2025, இன்டர் டிவிஷனல் RPF கால்பந்து போட்டி 2025யை, RPF திருச்சிராப்பள்ளி கோட்ட மூத்த கோட்ட பாதுகாப்பு ஆணையர்,பிரசாந்த் யாதவ்IRPFS, அவர்கள் தலைமையில், கமாண்டன்ட் G.ஸ்ரீனிவாஸ், திருச்சிராப்பள்ளி
கோட்ட உதவி பாதுகாப்பு ஆணையர் பிரமோத் நாயர் மற்றும் உதவி பாதுகாப்பு ஆணையர் A.K. பிரிட் ஆகியோர் முன்னிலையில், பொன்மலை ரயில்வே மைதானத்தில்,தொடங்கி வைத்தார்.
போட்டி 04.08.2025 முதல் 06.08.2025 வரை நடைபெறும். இந்தப் போட்டியில் TPJ,(திருச்சிராப்பள்ளி)TVC(திருவந்தரம்), SA(சேலம்), MDU(மதுரை) PGT(பாலகாடு) மற்றும் MAS(சென்னை) ஆகிய RPFஅணிகளைச் சேர்ந்த மொத்தம் 6 அணிகள் பங்கேற்கின்றன
போட்டியின் முதல் போட்டி TPJ (திருச்சிராப்பள்ளி)மற்றும் TVC( திருவந்தரம்)அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்தப் போட்டியில் TPJ(திருச்சிராப்பள்ளி) 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
Comments