அறுவடைக்கு தயாரான நிலங்களில் ஐஓசி நிறுவனத்தினர் குழாய் பதிக்கும் பணி - திருச்சி விவசாயிகள் கொந்தளிப்பு!!

அறுவடைக்கு தயாரான நிலங்களில் ஐஓசி நிறுவனத்தினர் குழாய் பதிக்கும் பணி - திருச்சி விவசாயிகள் கொந்தளிப்பு!!

திருச்சி தேநேரிபட்டி கிராமத்தில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு, நெல் அறுவடைக்கு தயாராகவுள்ள நிலத்தை, எந்த முன்னறிவிப்பும் இல்லாமல், IOC ந���றுவனத்தினர் சேதப்படுத்தி குழாய்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

சென்னையில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் இருந்து துவாக்குடி வாழவந்தான் கோட்டையில் உள்ள நிறுவனத்திற்கு டீசல் பெட்ரோல் ஆகியவை பூமிக்கடியில் புதைக்கப்பட்டு குழாய்கள் மூலமாக ஏற்கனவே அங்கிருந்து இங்கு வந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் புதிதாக எரிவாயு கொண்டுவருவதற்கான குழாய் பதிக்கும் பணிகள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி இன்று நடைபெற்று வந்த நிலையில் இதனை அறிந்த விவசாயிகள் ஜேசிபி உள்ளிட்ட ராட்சச இயந்திரங்களை முற்றுகையிட்டு
இப்பணிகளை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய…https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

https://youtu.be/Jvx_Piv60ks
Advertisement

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய…https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP