கடந்த 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் தேதி அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் தில்லை நகர் வீட்டில் இருந்து நடைபயிற்சிக்கு சென்ற பொழுது கடத்திக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை தற்பொழுது சிறப்பு புலனாய்வு குழு விசாரணை மேற்கொண்டு வருகிறது. 700க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினர். ஆனால் 13 முக்கிய ரவுடிகளை ஏன் உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த முடிவெடுத்தனர் என்பது அனைவருக்கும் கேள்வியாக இருக்கிறது.
ராமஜெயம் கொலை செய்யப்பட்ட முதல் நாள் இரவில் தில்லை நகர் பகுதியில் இதில் உள்ள ஐந்து ரவுடிகளின் செல்போன் எண்கள் நள்ளிரவில் அப்பகுதியில் பயன்பாட்டில் இருந்து உள்ளது .இதனை கண்டுபிடித்த சிறப்பு புலனாய் குழு இவர்களுக்கு கொலையாளிகளை தெரியும் இல்லையென்றால் இவர்கள் எதுவும் கொலை செய்ய திட்டமிட்டு கொடுத்தார்களா என்பதை கண்டறிய தற்பொழுது உண்மை கண்டறியும் சோதனை நடத்துகின்றனர்.
முக்கியமாக இதில் ஒரு ஐந்து ரவுடிகள் காரைக்கால் பகுதியில் கூடி கொலை நடந்த 29ஆம் தேதிக்கு முன்னதாக மூன்று நாட்கள் முன்பு சந்தித்துள்ளனர். அது மட்டும் இல்லாமல் இதற்கு அடுத்ததாக உள்ள ஜாபர் என்பவர் கொலை வழக்கில் இதில் உள்ள சில ரௌடிகள் தொடர்பும் உள்ளது ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .இப்படி பல ஆதாரங்களை திரட்டி உள்ள சிறப்பு புலனாய்வு இவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு எடுத்து நீதிமன்றத்தை நாடி அதற்கான ஆணை விரைவில் பெற உள்ளது.
எப்படி இருந்தாலும் ராமஜெயம் கொலை வழக்கு குற்றவாளிகளை நெருங்கும் நிலையில் சிறப்பு புலானாய்வு குழு உள்ளது .திட்டத்தை தீட்டியவர்கள் கொலையில் ஈடுபட்டவர்களை விரைவில் கண்டுபிடித்து விடுவோம் என்ற நம்பிக்கையில் சிறப்பு புலனாய்வு குழுவினர் உள்ளனர். இந்த கொலை தொழில் போட்டியில் ஏற்பட்ட கொலையா? அரசியல் கொலையா என்பது விரைவில் தெரியவரும். முக்கியமாக இந்த ரவுடிகள் யாரோ ஒருவர் சொல்லி இந்த கொலையை செய்துள்ளதாகவே தற்போது வரை தெரிகிறது.
இது அரசியல் கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகம் சிறப்பு குழுவினார்கள் எழுந்துள்ளது.
சிறப்பு தனிப்படை சிபிசிஐடி சிபிஐ எஸ் ஐ டி என மாறி மாறி ராமஜெயம் கொலை வழக்கு விசாரித்து வந்து இதுவரை எந்த துப்பும் கிடைக்கவில்லை இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் திருச்சி டிஐஜி அதிரடி காவல் துறை அதிகமான வருண்குமார் சிறப்பு புலனாய்வு குழுவிற்கு தலைமை ஏற்று ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்க துவங்கி விட்டார். டிஐஜி நேரடியாக களத்தில் இறங்கி பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு சென்று சுடலைமுத்து இடம் 3 மணி நேரம் விசாரணை
செய்ததாக கூறப்படுகிறது இவரிடம் இதற்கு முன் விசாரணை நடத்தியவர்களும் விசாரித்து உள்ளனர் ஆனால் டிஐஜி வருண் குமார்
வேறு ரகம் இவர் மிகுந்த நம்பிக்கை உடன் உள்ளார். ராமஜெயம் கொலை வழக்கு குற்றவாளிகளை வருகின்ற சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக கண்டுபிடித்து தீர வேண்டும் என்ற நிலையில் உள்ளார்
திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு 13 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள வழக்கிற்கு தற்பொழுது டிஏஜி நேரடியாக மத்திய சிறைக்கு சென்று
பாளையங்கோட்டை சிறைச்சாலையில் உள்ள தண்டனை கைதி சுடலைமுத்து என்பவருக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதனைத் தொடர்ந்து திருச்சி டிஐஜி வருண்குமார் பாளையங்கோட்டை சிறைச்சாலையில் நேற்று மூன்று மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தியுள்ளார்.
பாளையங்கோட்டை சிறைச்சாலையில் உள்ள சுடலைமுத்து மூன்று கொலை வழக்குகளில் தண்டனை பெற்று ஆயுள் தண்டனை கைதியாக பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கொலை நடந்த காலகட்டத்தில் தொழிற்பயிற்சிக்காக திருச்சி சிறைச்சாலை
இருந்ததாகவும் அப்போது ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக கைபேசியில் ஏதோ பேசியதாகவும் தற்பொழுது தகவல் வெளியாகி உள்ளது.
அந்த செல்போனை அப்போதே ஜெயிலராகவும் தற்போது பாளையங்கோட்டை சிறைச்சாலையின் கண்காணிப்பாளராக இருந்த செந்தாமரைக்கண்ணன் பறிமுதல் செய்து உடைத்தார் என தெரிகிறது.
ராமஜெயம் கொலை வழக்கு நீண்ட நாட்களாக விடை கிடைக்காத நிலையில் தற்போது கொலை கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறைவாசியாக உள்ள சுடலைமுத்துவுக்கு
இந்தக் கொலையை பற்றிய தகவல் தெரியும் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
எப்படி இருந்தாலும் எந்த வழக்கு எந்த சட்ட நடவடிக்கையாக இருந்தாலும் அதிரடி காட்டும் டிஐஜி வருண் குமார் களத்தில் இறங்கி நேரடியாக விசாரணையில் ஈடுபட்டதால் விரைவில் ராமஜெயம் கொலை வழக்கு முடிவுக்கு வரும் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments