Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

கரூர் செல்லும் பேருந்துகள் திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து தற்காலிகமாக இயக்கலாம்- நீதிமன்றம் உத்தரவு

கரூர் செல்லும் பேருந்துகள் திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து
இயக்கலாம் என இடைக்கால உத்தரவு பிறப்பித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையத்திலிருந்து கரூர் செல்லும் பேருந்துகள் செல்ல வேண்டும் என்ற அரசு உத்தரவிற்கு தடை விதிக்க உத்தரவிட கோரி மனு தாக்கல்.

மனு குறித்து திருச்சி மாநகராட்சி ஆணையர், நகராட்சி நிர்வாகம் துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், மற்றும் வட்டார போக்குவரத்து மண்டல அலுவலர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு.கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த குணசேகரன் உள்ளிட்ட 13 பேருந்து உரிமையாளர்கள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தனர்
அதில் “திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து தஞ்சாவூர் பெரம்பலூர் கரூர் புதுக்கோட்டை மதுரை சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் அனைத்து பேருந்துகளும் தற்போது புதிதாக கட்டப்பட்டுள்ள பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கவே பட்டு வருகிறது.
கரூருக்கு 18 தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து கரூருக்கு 81 கிலோமீட்டர் இதற்க்கு 2 மணி நேரம் 15 நிமிடங்களில் ஆகிறது.

பேருந்து சென்று வரக்கூடிய கால அவகாசத்தை வைத்து 1996 ஆம் ஆண்டு இந்த கால நிர்ணயம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் அதிகரித்த பின்னரும் இந்த நேரம் மாற்றி அமைக்கப்படாததால் பேருந்து இயக்கும் நேரம் பிரச்சனை ஏற்பட்டது நேரம் மாற்றி அமைக்க கோரிக்கை வைத்து வந்தோம். இருப்பினும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேலும் திருச்சி கரூர் வழிதடங்களில் தன் அதிக சாலை விபத்தும் உயிரிழப்பு ஏற்படுகிறது.

இந்நிலையில் எரியும் தீயில் எண்ணெய் ஊற்றியது போல தற்போது தமிழக அரசால் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்ட மதுரை சாலையில் உள்ள பஞ்சப்பூர் முத்தமிழ் கலைஞர் கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் இருந்து கரூர் வழித்தடத்தில் செல்லும் பேருந்துகளை இயக்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.ஏற்கனவே உள்ள தொலைவில் இருந்து பஞ்சப்பூர் பேருந்து நிலையம் மன்னார்புரம் நான்கு வழிச்சாலையாக
7 கிலோமீட்டர் கூடுதலாக வருகிறது.

திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பஞ்சப்பூர் பேருந்து நிலையம் செல்ல 20 நிமிடங்கள் ஆகிறது. ஏற்கனவே நிர்ணயம் செய்யப்பட்ட நேரத்தோடு இந்த 20 நிமிடங்களையும் சேர்த்தாலே 2 மணி நேரம் 35 நிமிடங்கள் ஆகும். ஆகவே கரூரிலிருந்து திருச்சி வருவதற்கான கால நேர வரம்பை மாற்றி அமைக்க கோரி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.

எனவே திருச்சியில் இருந்து கரூர் வழிதடத்தில் செல்லும் அணைத்து தனியார் பேருந்து உரிமையாளகளை கூட்டி பயன் கால நிர்ணயம் கூட்டம் நடத்தி கால அட்டவனை திருத்தம் செய்து கொடுக்க புதிய நேர அட்டவணை அறிவிக்க வேண்டும்.இவ்வாறு புதிய நேர அட்டவணை கொடுக்கும் பட்சத்தில் 18 பேருந்துகளும் பஞ்சப்பூர் பேருந்து நிலையத்திலிருந்து கரூர் வழித்தடத்தில் செல்வதற்கு எந்த ஆட்சியபனையும் இல்லை.
எனவே தற்போது பஞ்சப்பூர் பேருந்து நிலையத்திலிருந்து கரூர் பேருந்து செல்ல வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்து
புதிய நேர அட்டவணை வெளியிடும் வரை கரூர் பேருந்துகள் திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இயக்க அனுமதிக்க உத்தரவிட வேண்டும். என உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சரவணன் முன் விசாரணைக்கு வந்தது.விசாரணை செய்த நீதிபதி கரூர் செல்லும் பேருந்துகள் தற்போது திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படுகிறது அதே நிலை தொடரலாம் இன்று உத்தரவிட்ட நீதிபதி
மனு குறித்து திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர் வழங்கல் துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், மற்றும் வட்டார போக்குவரத்து மண்டல அலுவலர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்தி வைத்தார்.
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *