திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் பெய்து வரும் தொடர் கன மழையால் இப்பகுதியில் உள்ள ஏரிகள் நிரம்பி முழு கொள்ளளவு எட்டி வழிந்து ஓடி வரும் நிலையில் உப்பிலியபுரத்தை அடுத்துள்ள சோபனபுரத்தில் உள்ள திருவள்ளுவர் ஏரிக்கு நீர் நிரம்பாம்பல் இருப்பது விவசாயிகளிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

68 ஏக்கர் பரப்பளவவில் சுமார் 40 அடி ஆழம் கொண்ட இந்த ஏரி, திருச்சி மாவட்டத்தில் உள்ள மிக ஆழமான ஏரியாகும். சுமார் 100 அடி நீளமும், 40 அடி உயரமும் உள்ள தடுப்பணை மற்றும் மதகு வழியாக 400 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசனத்திற்கு நீராதாரமாக இந்த ஏரி அமைந்துள்ளது.

இந்த ஏரியின் கரையில் திருவள்ளுவர் கோயில் அமைந்துள்ளது சிறப்பாகும். பச்சைமலை நீர் பிடிப்பு பகுதியான மண்மலையிலிருந்து வரும் கஞ்சனாறு மற்றும் மழைகால காட்டாறுகளை நீராதாரமாக கொண்ட இந்த ஏரி , ஓசரப்பள்ளி , காந்திபுரம் , காஞ்சேரிமலைப்புதூர் மற்றும் சோபனபுரத்திற்கு குடி நீர் ஆதாரமாக விளங்குகிறது.

2021ல் ஏரியின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நிலையில் ஏரிக்கு நீர் வரும் நீர் வழிப்பாதைகள் முறையாக தூர் வாரப்படாத காரணத்தால் ஏரிக்கு நீர் வரத்து இன்றி நிரம்பாதது கண்டு விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments