திருச்சி மாவட்டம், லால்குடி தாலுக்கா, பம்பரம்சுத்தி கிராமத்தில் வசித்து வந்த புகார்தாரர் திரு.நருவுளி என்பவர் வாரிசு சான்றிதழ் கேட்டு லால்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 14.8.2009 அன்று மனு கொடுத்துள்ளார். மேற்படி மனு பம்பரம்சுத்தி VAO அலுவலகத்திற்கு நடவடிக்கைக்காக வந்துள்ளதை அறிந்து புகார்தாரர் நருவுளி VAO திருமதி.ராதாவை, பம்பரம்சுத்தி வி.ஏ.ஓ. அலுவலகத்தில் கடந்த 31.08.2009ம் தேதி காலை சுமார் 11 மணிக்கு சந்தித்து தனது வாரிசு சான்றிதழ் குறித்து கேட்டபோது, VAO திருமதி.ராதா, புகார்தாரர் திரு.நருவுளியிடம் வாரிசு சான்றிதழ் கிடைக்க ஏற்பாடு செய்ய ரூ.500/- பணத்தை லஞ்சமாக கேட்டுள்ளார்.

லஞ்சம் கோடுக்க விருப்பாத புகார்தாரர் திரு.தருவுளி இது குறித்து கடந்த 31.08.2009 மாலை திருச்சி லஞ்ச ஒழிப்புப் பிரிவு அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
சுடந்த 01.09.2009 முற்பகல் பம்பரம்கத்தி VAO அலுவலகத்தில் வைத்து புகார்தாரர் திரு.தருவுளியிடம் ரூ.500/- பணத்தை லஞ்சமாக VAO ராதா வாங்கிய போது, அவரை அங்கு மறைந்து இருந்த திருச்சி விஜிலன்ஸ் போலீசார் கையும் களவுமாக பிடித்துக் கைது செய்தனர்.

திருமதிராதா திருச்சி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 15 நாட்கள் நீதிமன்ற காவல் கொடுக்கப்பட்டதால், அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேற்படி வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு வழக்குகள் சிறப்பு நீதிமன்றத்தில் சாட்சிகள் விசாரணை நடைபெற்று, முடிந்து, இன்று 27,04,2026 திருச்சி ஊழல் தடுப்பு வழக்குகள் சிறப்பு நீதிமன்ற நீதிபதி திரு.புவியரசு அவர்கள், VAO திருமதி.ராதாவிற்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.4,000/- அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார். வழக்கு விசாரணையின்போது, திறம்பட அரசு வழக்கறிஞர் திரு.கோபிகிருஷ்ணன், டி.எஸ்.பி. திரு.மணிகண்டன், காவல் ஆய்வாளர் திரு.சக்திவேல் ஆகியோர் சாட்சிகளை ஆஜர் செய்து அரசு தரப்பில் எடுத்துரைக்கப்பட்டு தண்டனை எதிரிக்கு வழங்கப்பட்டுள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments