2024 நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பணிகளை மேற்கொள்ள திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் கழக செயல் வீரர்கள் கூட்டம் திருவெறும்பூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுவையில்….. வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் 80 சதவீத வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கு கழக வீரர்கள் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் அடுத்தவர்களின் விமர்சனங்களை கண்டு கொள்ளாமல் நம் ஆட்சியின் சாதனைகளை மக்களிடத்தில் கொண்டு செல்ல வேண்டும். ஒன்றிய அரசு நமக்கு பல தொல்லைகளை தந்து கொண்டிருக்கிறார்கள். நேற்றைக்கு நடந்த சம்பவம் போல் அன்பில் மகேஷ் பொய்யாமொழியான எனக்கும் வரலாம். இந்த இடத்தில் ஒரு விதையை விதைக்கிறேன்.
நான் இருந்தாலும், இல்லாவிட்டாலும் கழக தோழர்கள் நாடாளுமன்ற பணிகளை செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்றார். நிகழ்வில் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாபன், முன்னாள் எம்எல்ஏ கே.என்.சேகரன், மண்டலம் மூன்றின் தலைவர் மதிவாணன் மற்றும் திமுக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn







Comments