Site Logo mobile
Search Icon
Mobile Gif
Uncategorized

தென்னந்தோப்பில் தில்லாக மது விற்பனை

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் பகுதியில் கள்ள சந்தையில் நடைபெறும் மது பாட்டில் விற்பனை தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அரசு மதுபான கடைகள் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும் என அறிவித்திருந்தாலும் பல இடங்களில் சட்டவிரோதமாக காவலர்களுக்கு தெரிந்தே கள்ள சந்தையில் அதிக விலைக்கு மது விற்பனை நடைபெற்று வருகிறது.

இதன் தொடர்ச்சியாக இன்று மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அய்யம்பாளையம் அடுத்து கருங்காடு பகுதியில் அரசு மதுபான கடை எதிரே கள்ள சந்தையில் 160 குவுட்டர் பாட்டிலுக்கு 250 ரூபாய் ஒரு பாட்டிலுக்கு 90 ரூபாயிலிருந்து 120 ரூபாய் வரை அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. கள்ள சந்தையில் விற்பனை செய்பவரிடம் மது பாட்டில் கேட்டால் அவர் நான்கு ஐந்து இடங்களில் பாத்திரம் சாக்கு போன்ற இடங்களில் மறைத்து வைத்து மது பாட்டில்களை எடுத்துக் விற்பனை செய்து வருகிறார்.

அந்த மது பாட்டிலை வாங்கியவர் மது பாட்டில் வேண்டாம் என திருப்பி கொடுத்தால் சரக்கு என்பதால் தானே திருப்பி தரீங்க நானாக இருக்கவும் வாங்குறேன் வேற யாரும் வாங்க மாட்டாங்க. நீங்க நாலு குவாட்டர் பாட்டில் வாங்குகிறேன் என்று சொன்னதுனால தான் 250 ரூபாய் சரக்க 220 ரூபாய்க்கு கொடுத்தேன் அதையும் திருப்பி தரீங்க என தெரிவித்தார். மேலும் இங்க மது பாட்டில் விக்கிறீங்களே காவலருக்கு காசு தருவீங்களா என்று கேட்டதற்கு அது நாங்கள் போலீசாருக்கு பணம் கொடுத்து கொண்டு தான் இருக்கிறோம் என பகிரங்கமாக வாக்குமூலம் அளிக்கிறார்.

இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தொடர்ந்து மது விற்பனை கள்ள சந்தையில் நடைபெற்று வருவதை இரும்பு கரம் கொண்டு திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூகஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
https://t.me/trichyvision
https://t.me/trichyvision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *