திருச்சி BHEL கைலாசபுரம் கிளப்பில் சோழன் KO கலை அகாடமி சார்பில் “லிட்டில் பிரஷ்” என்ற பிரம்மாண்ட கலைக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. மழலையர் பள்ளி முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் திருச்சியின் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 15 இளம் கலைஞர்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ள

இக்கண்காட்சியில், நிலக்காட்சிகள், உணர்ச்சிப்பூர்வமான உருவப்படங்கள் மற்றும் தத்ரூபமான நிழற்படங்கள் என 150-க்கும் மேற்பட்ட ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பிஞ்சு கரங்களின் இந்த வண்ண ஜாலங்கள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்து வருவதுடன், பல கலை ஆர்வலர்கள் மாணவர்களின் படைப்புகளை ஆர்வத்துடன் விலைக்கு வாங்கியும் வருகின்றனர். ஜனவரி 4 முதல் 8-ஆம் தேதி வரை காலை 10:30 மணி முதல் இரவு 9:00 மணி வரை நடைபெறும் இக்கண்காட்சிக்கு அனுமதி இலவசம் என்பதால்,

பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து இளைய தலைமுறை கலைஞர்களை ஊக்குவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இம்மாணவர்களின் அபாரத் திறமையைப் பாராட்டி “தி இந்து” நாளிதழும் சிறப்புக் கட்டுரை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision






Comments