மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்களுடன் மரியாதை நிமித்தமான சந்திப்பு.காங்கிரஸ் பேரியக்கத்தின் முன்னணித் தலைவரும், நாடாளுமன்ற மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவருமான திரு. ராகுல் காந்தி அவர்களை, நான் புதுடெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து, சுமார் ஒரு மணி நேரம் உரையாடினேன்.
அப்போது, தமிழ்நாட்டின் அரசியல் சூழல், ஒன்றிய அரசின் மும்மொழிக் கொள்கை, ஹிந்தி திணிப்பு, மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட இன்றைய அரசியல் நிலவரங்கள் குறித்து விவாதித்தோம்.சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற எனது மகளின் திருமணத்திற்கு அவரால் வர இயலாத சூழலில்
டெல்லி வரும்போது மணமக்களைத் தனது இல்லத்திற்கு அழைத்து வருமாறு திரு. ராகுல் காந்தி அவர்கள் அன்புடன் கேட்டுக்கொண்டார்.அவரது அழைப்பின் பேரில், இன்று (26.03.2025) எனது மனைவி, மகள் மற்றும் மருமகனுடன் அவரைச் சந்தித்தோம். அப்போது, மணமக்களை அவர் மனதார வாழ்த்தினார்.
இச்சந்திப்பு மிகவும் மகிழ்ச்சிகரமாக அமைந்தது. என்று துரை வைகோ அவர்கள் கூறினார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments