தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தூய வளனார் கல்லூரி இயற்பியல் துறை ஸ்டீபன் ஹாக்கிங் இனோவேஷன் கிளப் மற்றும் தூய வளனார் கல்லூரி மேல்நிலைப்பள்ளி ஆடிபர்ட் அறிவியல் மன்றமும் இணைந்து தொலைநோக்கி மூலம் முழு சந்திர கிரகணத்தை பொதுமக்கள் காணும் வகையில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்தது.
திருச்சியில் மழை மற்றும் மேகமூட்டம் காரணமாக சந்திர கிரகணம் தென்படாததால் சிறு ஏமாற்றம் இருந்தாலும், மக்கள் அறிவியல் விழிப்புணர்வோடு தேநீர் விருந்தில் கலந்து கொண்டனர். இந்நிகழ்வு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாவட்டத் தலைவர் ஜான்சன் பிரான்சிஸ் தலைமையில் நடைபெற்றது. இயற்பியல் துறைத் தலைவர் முனைவர்.ஜான்சன் பங்கேற்று தொடங்கி வைத்தார்.
மண்டல ஒருங்கிணைப்பாளர் மு.மணிகண்டன் அறிமுகவுரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் அருட்தந்தை முனைவர்.மரிய தாஸ் சே.ச., வாழ்த்துரை வழங்கினார். முதலில், இயற்பியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர்.அலெக்சாண்டர் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
இந்நிகழ்வில் கிரகண நேரலை காட்சிகள் திரையிடப்பட்டதுடன், தொலைநோக்கி செயல்பாடு, கிரகணத்தைச் சூழ்ந்த தவறான நம்பிக்கைகள் குறித்து பேராசிரியர்கள் முனைவர்.ஆண்டனி ராஜ், முனைவர்.அருண்விவேக், (தூய வளனார் கல்லூரி), முனைவர்.பாலின் ப்ரீத்தா ஜெபசெல்வி (பிஷப் ஹூபர் கல்லூரி) உள்ளிட்டோர் விளக்கம் அளித்தனர்.
அறிவியல் இயக்க மாவட்ட துணைத் தலைவர்களான முனைவர்.சலாஹூதீன், சந்திரா, இணைச் செயலாளர் க.பகுத்தறிவன், செயற்குழு உறுப்பினர்களான வழக்கறிஞர்.ரங்கராஜன், சுஜிதா கிரேசி, புவனேஸ்வரி, திருமாவளவன், மகாலெட்சுமி உள்ளிட்ட பேராசிரியர்கள், ஆசிரியர்கள், கல்லூரி, பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் என 300க்கும் மேற்பட்ட நபர்கள் நிகழ்வில் பங்கேற்று உற்சாகமூட்டினர். மாவட்டப் பொருளாளர் ச.மாரிமுத்து நன்றி கூறினார். இந்நிகழ்வை இணைச் செயலாளர் முனைவர்.ஜானி குமார் தாகூர் ஒருங்கிணைத்தார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision
Comments