திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமான சுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமாக தேவதானம் பகுதியில் உள்ள சுமார் 69சென்ட் இடத்தில் மலைக்கோட்டை கோயிலுக்கு சொந்தமான லட்சுமி யானை குளிப்பதற்காக ரூபாய் 50 லட்சம் செலவில் பெரிய குளியல் தொட்டி கட்டப்பட்டுள்ளது.
லெட்சுமி யானைக் குளிப்பதற்காக கட்டப்பட்ட குளியல் தொட்டியினை இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு இன்று திறந்து வைத்தார். தொடர்ந்து லட்சுமி யானை குளியல் தொட்டிக்கு கொண்டுவரப்பட்டு அதற்கு குளிப்பாட்டப்பட்டது. லட்சுமி யானை உற்சாகமாக குளித்தது.
இந்நிகழ்வில் இணை ஆணையர் கல்யாணி, உதவி ஆணையர், செயல் அலுவலர் அனிதா, இந்து அறநிலை துறை ஆணையர் ஸ்ரீதர், திருச்சி உதவி ஆணைய லட்சுமணன், ஸ்ரீரங்கம் இணை ஆணையர் மாரியப்பன், சமயபுரம் இணை ஆணையர் பிரகாஷ், திருவானைக்காவல் உதவி ஆணையர் சுரேஷ் உட்பட அதிகாரிகள் கலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments