திருச்சி உறையூர், பாண்டமங்கலம் மெயின் ரோடு மாரியம்மன் கோவில் அருகில் உள்ள மின்கம்பமும், இதேபோல் தென்னூர் அண்ணாநகர் முதல் கிராஸில் உள்ள மின்கம்பமும் மிகவும் பழுதடைந்த நிலையில் அச்சுறுத்தும் வகையில் உள்ளது.
இவற்றை மாற்றி தரக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கு பகுதி செயலாளர் M.I.ரபிக் அஹமது தலைமையில் தமிழ்நாடு மின்சார வாரியம் தென்னூர் பிரிவில் மனுக் கொடுக்கப்பட்டது.
இதில் அண்ணாநகர் கிளை செயலாளர் S.முருகன், பாண்டமங்கலம் கிளை செயலாளர் சுப்பிரமணி, பகுதிக்குழு உறுப்பினர் ஆசிக் அலி, கிளை உறுப்பினர்கள் அக்பர் அலி,செல்வம் மற்றும் விஜய் ஆகியோர் கலந்து கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments