இந்திரா கணேசன் கல்வியகத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை மற்றும் உன்னத் பாரத் அபியான் சார்பில், “மீண்டும் மஞ்சப்பை” என்ற பெயரில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு உலகச் சாதனை நிகழ்ச்சி 06.01.2026 சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நடைபெற்றது.
ஒருமுறை பயன்படும் நெகிழி பைகள் மற்றும் நெகிழி கோப்பைகளின் தவிர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாற்றாக துணிப்பைகள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், 3000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒரே நேரத்தில் “மீண்டும் மஞ்சப்பை” என்ற மனித வடிவ அமைப்பை (formation) இந்திரா கணேசன் கல்வியகத்தின் மைதானத்தில் உருவாக்கி உலகச் சாதனை படைத்தனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும், ஒருமுறை பயன்படும் பிளாஸ்டிக்குகளை தவிர்க்கும் அடையாளமாக 3000 துணிப்பைகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியை, இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்களின் செயலாளர் திரு. ஜி. இராஜசேகரன் அவர்கள் துவக்கி வைத்து, துணிப்பை பயன்பாட்டின் அவசியம் குறித்து வலியுறுத்தினார்.
நிறுவனத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலைத்த வளர்ச்சியிலான உறுதியை, இயக்குநர் டாக்டர் ஜி. பாலகிருஷ்ணன் அவர்கள் தனது உரையில் எடுத்துரைத்தார்.
நிகழ்ச்சியின் நோக்கங்கள் மற்றும் அதன் சமூக முக்கியத்துவத்தை பதிவாளர் டாக்டர் எம். அனுசுயா அவர்கள் விளக்கினார். கௌரவ விருந்தினராக கலந்து கொண்டு ஊக்கமளிக்கும் உரையாற்றிய ரோட்டேரியன் ஏ.கே.எஸ். ஸ்ரீனிவாசன் (ஆலோசகர் – இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்கள்; தலைவர் – இந்திய செங்குருதி சங்கம், ஸ்ரீரங்கம் கிளை) அனைவரின் பாராட்டையும் பெற்றார்.
முதன்மை விருந்தினராக கலந்து கொண்ட தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் எர். எஸ். சிவரஞ்சனி அவர்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த மதிப்புமிக்க கருத்துகளை வழங்கினார்.
இந்த உலகச் சாதனை முயற்சியை, ஜீனியஸ் இன்டர்நேஷனல் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தின் மூத்த மதிப்பாய்வாளர் (தென் மண்டலம்) கே. என். சக்திவேல் அவர்கள் அதிகாரப்பூர்வமாக உலகச் சாதனையாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து, உலகச் சாதனைச் சான்றிதழை இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்களின் மேலாண்மை இயக்குநருக்கு (Managing Director) வழங்கினார்.
மேலும், சிறப்பு விருந்தினர்களாக ஈரோடு ரோட்டேரியன் எம்.பி.எச்.எப். கே. சிவப்பிரகாசம் (தலைவர்), ரோட்டேரியன் சுப்ரமணியன் (முன்னாள் தலைவர்) மற்றும் நீலமேகம் தண்ணீர் அமைப்பு, திருச்சி ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியின் முன்னதாக இந்திரா கணேசன் கலை அறிவியல் கல்லூரி பேராசிரியர் செல்வகுமார் அவர்கள் வரவேற்புரையும், நிறைவில் இந்திரா கணேசன் சித்த மருத்துவக் கல்லூரி பேராசிரியர் டாக்டர் ப. வரலக்ஷ்மி அவர்கள் நன்றி உரை வழங்கினர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments