அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட மலைக்கோட்டை வார்டு 13, தாயுமானவர் தெருவில் மாநகராட்சி பொதுநிதி ரூ.19.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைத்த குழந்தைகள் வளர்ச்சி மைய கட்டடம் மற்றும் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில்
கட்டப்பட்டுள்ள மாநகராட்சி பல்நோக்கு அலுவலக பயன்பாட்டுக் கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ்,
மண்டலக் குழுத்தலைவர் மு.மதிவாணன், மாமன்ற உறுப்பினர் திருமதி. மணிமேகலை ராஜபாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Comments