நேற்று 26.09.2025 மாலை புதிய நீதிமன்ற வளாகத்தில் மாண்புமிகு உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட நீதிபதி M. கிறிஸ்டோபர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது நிகழ்ச்சியில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகள், நிலுவையில் உள்ள முதல் தகவல் அறிக்கை 28735 எண்ணிக்கையில் உள்ளதால் இதன் மீது உடனடியாக கவனம் செலுத்தி செயல்பட வேண்டும் என்றும் மற்றும் நிலுவையில் உள்ள 2123 பிணையில் வெளிவர முடியாத பிடியானை ஆகியவற்றை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று அனைத்து காவல்துறையினருக்கும், நீதிபதிகளுக்கு நேரிலும் காணொளி மூலமாகவும் மற்றும் அதிகாரிகளுக்கு மாவட்ட நீதிபதி அறிவுறுத்தினார். மேலும் நீதிபதிகளுக்கும் அறிவுறுத்தல்களும் மாவட்ட நீதிபதியால் அறிவுறுத்தப்பட்டன. மணப்பாறை, முசிறி, லால்குடி மற்றும் பல நீதிமன்றத்தில் இருந்து நீதிபதிகள் காணொளி மூலமாக கலந்து கொண்டனர்
நிகழ்ச்சியில் நீதிபதிகள் சுவாமிநாதன், சரவணன், வெங்கடேசன், கார்த்திகா, சண்முகப்பிரியா அரசு வழக்கறிஞர்கள் சவரிமுத்து, மோகன் திருச்சி மாவட்டத்தில் உள்ள காவல்துறை உதவி ஆணையர்கள், மாவட்ட ஆட்சியாளர் சட்ட அலுவலக உதவியாளர் பாண்டியன், குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் P. V. வெங்கட் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments