Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

கொலை வழக்கு: 14 பேரில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாலுகா பகுதியை சேர்ந்த ஜெதீகஸ்பாண்டி, (34), த.பெ. குபேந்திரன் என்பவர் தனது சகோதரர் சிம்பு (எ) சிலம்பரசன், (34), த.பெ. குபேந்திரன், ஜெயபாண்டி(34), த.பெ. தெய்வேந்திரன் என்பவர்களுடன் சேர்ந்து வெளி மாநிலங்களில் இருந்து சரக்குகளை ஏற்றிவரும் லாரிகளுக்கு வழிகாட்டும் பணியை கமிஷன் தொகை பெற்றுக்கொண்டு செய்துவந்ததாகவும், அதே போன்று அரவிந்த் 32/25, த.பெ.அங்குசாமி, காசாநகர், வேடசந்தூர், திண்டுக்கல் மாவட்டம் மற்றும் அவரது தரப்பினர்களும் இதே தொழிலை செய்து வந்தநிலையில் இவர்களுக்குள் ஏற்பட்ட தொழில் போட்டி காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 09.01.2019 அன்று ஜெதீகஸ்பாண்டி, சிம்பு (எ) சிலம்பரசன், ஜெயபாண்டி, சூர்யபிரகாஷ், ரபீக்ராஜா, சௌந்தரபாண்டியன் ஆகியோர் Hyundai 120 TN 59 BF 7959- காரில் திருச்சிக்கு வந்துக்கொண்டிருந்தபோது சிலம்பரசனின் வாடிக்கையாளரான ரவி என்பவர் ஜெயபாண்டியை செல்போனில் தொடர்புக்கொண்டு தோகமலைக்கு வரசொன்னதாகவும், அதன்படி அவர்கள் 13:30 மணிக்கு மணப்பாறை-குளித்தலை ரோடு மாரிஸ் மில் அருகே சென்றபோது அவர்களை பின்தொடர்ந்து காரில் வந்த எதிரிகள் அரவிந்த் 32/25, த.பெ அங்குசாமி, விஜயபாண்டி 36/25, த.பெ அங்குசாமி, காசா நகர், வேடசந்தூர், திண்டுக்கல் மாவட்டம், முத்துவேல் 34/25, த.பெ. மாடசாமி, என்.பி.எஸ் காலனி, பர்மா காலனி, திண்டுக்கல் மாவட்டம், பாதுஷா (எ) பால்பு பாதுஷா 38/25, த.பெ. ஜாஹிர் உசேன், ராமச்சந்திரா நகர், இ.புதூர், திருச்சி. (HS.No.21/23), ஆனந்த் 45/25, த.பெ கலியமூர்த்தி, கருமண்டபம், திருச்சி, மதன்குமார் 32/25, த.பெ. பெரியசாமி, தேனி, பிரபு 39/25, த.பெ பெரிய பாண்டி, உசிலம்பட்டி, மதுரை, பாலமுருகன் 28/25, த.பெ பெருமாள், விராலிப்பட்டி காலனி, திண்டுக்கல், தங்கமலை 40/25, S/o பெரியகருப்பு தேவர், செம்பட்டி, மதுரை, செல்வம் 50/25, S/o தங்கமுத்து, மேலூர், மதுரை, விக்னேஷ் 22/19, S/o வடிவேல், வேடசந்தூர்-Tk, திண்டுக்கல்-Dt. (Died), முகமது ஆசிக் 30/25, S/o ஜாஃபர், பர்மா காலனி, திருச்சி, ஜெகஜீவன் 22/19, ச/ஒ எம்பெருமாள், காஜாமலை, திருச்சி. (Died), பப்லு @ பிரபு 41/25, S/o ஜெயராஜ், இ.புதூர், திருச்சி என்பவர்கள் மேற்படி காரை வழிமறித்து நிறுத்தி அதிலிருந்து எதிரி -1 அரவிந்த் அரிவாளுடன் வந்து ஜெகதீஸ் பாண்டியை சரமாரியாக வெட்டி, கொலை செய்ததாகவும், மற்ற எதிரிகள் சிலம்பரசன், ஜெயபாண்டி என்பவர்களை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்று விட்டதாக இறந்தவரின் அண்ணன் சிம்பு (எ) சிலம்பரசன், என்பவர் கொடுத்த புகாருக்கு மணப்பாறை காவல் நிலைய குற்ற எண். 10/2019 u/s 314, 147, 148, 427, 302,120 (b), 326 IPC ன் படி 09.01.2019 அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கின் எதிரிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கின் விசாரணை திருச்சி இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் (II-ADJ) நடைபெற்று வந்தது.

மேற்படி வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக பாலசுப்பிரமணியன், ஆஜராகி வாதிட்டு வந்த நிலையில் இன்று (15.10.2025) திருச்சி இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி கோபிநாத், (II- ADJ) அவர்கள் எதிரி -1 அரவிந்த் 32/25, த.பெ அங்குசாமி. காசா நகர், வேடசந்தூர், திண்டுக்கல் மாவட்டம் என்பவருக்கு ஆயுள் தண்டனையும், ரூபாய். 10, 000 அபராதமும், A3 & A4 க்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், A5 & A6 எதிரிகளுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையுடன் ரூ.10,000/- அபராதமும், வழங்கி தீர்ப்பளித்துள்ளார். மேலும் A2, A7, A8, A9, A10, A12 மற்றும் A14 ஆகியோர் இவ்வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர். A11 மற்றும் A13 ஆகியோர் இறந்துவிட்டனர்.

இவ்வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தந்தமைக்காக அச்சமயம் மணப்பாறை காவல் நிலைய ஆய்வாளராக இருந்த திரு. கருணாகரன் மற்றும் தற்போதைய காவல் ஆய்வாளர் ராஜா சேர்வை ஆகியோர்களையும் மற்றும் நீதிமன்ற பெண் தலைமை காவலர் ஆண்டாள் ஆகியோரையும் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரத்தினம், இகாய அவர்கள் வெகுவாக பாராட்டி, வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *