கோவிலுக்கு சென்ற குடும்பத்தினர் - கொள்ளையில் இறங்கிய மர்ம நபர்கள்!!

கோவிலுக்கு சென்ற குடும்பத்தினர் - கொள்ளையில் இறங்கிய மர்ம நபர்கள்!!

திருச்சி மாவட்டம் சோமரசம் பேட்டை அருகே அதவத்தூர் சக்திநகர் பகுதியில் வசித்து வருபவர் தண்டபாணி(70). இவர் தனது குடும்பத்துடன் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரண்டு நாட்கள் பழனி முருகன் கோவிலுக்கு சென்றுள்ளார்.

Advertisement

கோவிலுக்கு சென்று விட்டு நேற்று இரவு 11 மணியளவில் வீடு திரும்பிய போது அங்கு அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு பீரோவில் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதில் பீரோவில் வைத்திருந்த சுமார் 21 பவுன் தங்க நகைகள் மற்றும் 2,45,000 இலட்சம் பணம் ஆகியவை காணாமல் போயிருந்தது.

புகாரின் அடிப்படையில் சோமரசம்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். சம்பவ இடத்தில் கைரேகை நிபுணர்கள் ஆய்வு செய்து வெளிநபர் சம்பந்தப்பட்ட கைகள் இரண்டு கண்டுபிடித்துள்ளதாக முதல்கட்ட தகவல் தெரிவித்துள்ளனர்