தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு கைத்தறி ஆடை அணிந்து பேரணியாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்திய கல்லூரி மாணவிகள்
உள்ளூர் தொழில்களை குறிப்பாக கைத்தறி நெசவாளர்களை ஊக்கப்படுத்தும்விதமாக சுதேசி இயக்கம் தொடங்கப்பட்ட ஆகஸ்ட் 7ஆம்தேதி தேசிய கைத்தறிதினமாக கொண்டாடப்படுகிறது.
இதனிடையே, தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு திருச்சி ஸ்ரீமதி இந்திராகாந்தி மகளிர் கல்லூரி மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வுபேரணி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் கஜலட்சுமி முன்னிலையில், பேரணியை கல்லூரி மாணவ பிரதிநிதி அபிநயா கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
இதில் 300க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் பாரம்பரிய கைத்தறி சேலை அணிந்து, “கைத்தறி ஆடைகளை அணிவோம் நெசவாளர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாப்போம்” என்ற முழக்கத்துடன் பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கல்லூரி வளாகத்தில் இருந்து தொடங்கிய பேரணி சத்திரம் பேருந்துநிலையம், சிந்தாமணி அண்ணாசிலை வழியாக சென்று மீண்டும் கல்லூரியை வந்தடைந்தது.
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments