புதிதாக தொடங்கப்பட்ட திருச்சி சரக தொல்லியல் வட்டம் - கண்காணிப்பாளராக பொறுப்பேற்றார் அருண் ராஜ்!!

புதிதாக தொடங்கப்பட்ட திருச்சி சரக தொல்லியல் வட்டம் -  கண்காணிப்பாளராக பொறுப்பேற்றார் அருண் ராஜ்!!

மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை புதிதாக ஆறு தொல்லியல் வட்டங்கள் தொடங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டு இருந்தது இந்த புதிய ஆறு வட்டங்களில் தமிழகத்தில் திருச்சி ஒன்றாகும்.

தமிழகத்தைப் பொருத்தவரை சென்னையில் ஒரு தொல்லியல் வட்டம் உள்ள நிலையில் இரண்டாவது தொல்லியல் வட்டம் திருச்சி மாவட்டத்தை மையமாகக் கொண்டு தென்னக தொல்லியல் வட்டமாக தொடங்கப்பட்டுள்ளது.

திருச்சி சரகத்தில் வரும் மாவட்டங்களில் உள்ள பலம் பெறும் சின்னங்கள் கோயில்கள் போர் நடத்திய இடங்கள் மற்றும் தொல்பொருள்
ஆராய்ச்சிகளில் விரிவடைய செய்யும் வகையில் திருச்சி சரக தொல்லியல் வட்டம் செயல்பட உள்ளது.

இதுகுறித்து திருச்சி விஷனுக்கு பேட்டியளித்த டெல்லியில் இருந்து தற்போது திருச்சி தொல்லியல் வட்டத்திற்கு கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அருண்ராஜ், "திருச்சியை மையமாகக் கொண்டு திருச்சி முதல் கன்னியாகுமரி வரை தொல்லியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள உள்ளதாகவும் இதனால் ஆராய்ச்சிகள் விரிவடைவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும்,பலவருட போராட்டங்களுக்கு பிறகு திருச்சி சரக தொல்லியல் வட்டம் உருவாகியுள்ளதாகவும், சென்னை மற்றும் கேரளாவில் இருந்து மொத்தம் 162 நினைவுச்சின்னங்கள் திருச்சி சரகத்திற்கு கொண்டுவர பட்டுள்ளதாகவும்,

Advertisement

தொல்லியல் நினைவுச் சின்னங்கள் கோயில்கள் போர் நடைபெற்ற இடங்கள் என திருச்சி கழகத்திற்குள் வரும் நினைவுச் சின்னங்கள் குறித்த அகழ்வாராய்ச்சிகள் மத்திய அரசின் நிதியை பெற்று விரிவடையும்

மேலும் தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் மட்டுமல்லாது புதுக்கோட்டை, திருச்சி, குடுமியான்மலை, கொடும்பாவூர் உள்ளிட்ட பகுதியில் உள்ள தொல்லியல் நினைவுச் சின்னங்களை பிரபல படுத்தும் வகையிலும் அரியவகை நினைவு சின்னங்களை மக்களுக்கு வெளிக்கொணரும் வகையிலும் மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்பையும் பெற்று பணிகள் நடைபெறும் என்று தெரிவித்தார்.

திருச்சி சரக தொல்லியல் வட்டத்தின் மூலம் தென் மாவட்டங்களிலுள்ள வரலாற்று சிறப்புமிக்க தொல்லியல் பொருட்கள் குறித்த விரிவான ஆய்வுகள் இதன் மூலம் விரிவடையும்.

Advertisement