Wednesday, September 10, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

ஆபாச பதிவு – இளைஞர் கைது – சிறையில் அடைப்பு

திருச்சிராப்பள்ளி மாவட்டம், சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் விஜய் (26), என்பவர் இணைய மற்றும் சமூக வலைதள குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்காணித்த போது, கடந்த (04.12.23)-ஆம் தேதி சமுகவலைதளமான YouTube மற்றும் Instagram -வை பார்த்துக் கொண்டு இருந்த போது inba’s track என்ற பெயரில் @inba’s track – என்ற id -யை பயன்படுத்தி இன்பநிதி (30, த.பெ. மகாலிங்கம். அறந்தாங்கி, புதுக்கோட்டை மாவட்டம் என்பவர். சமூக வலைதளங்களில் ஆபாசத்தை தூண்டும் வகையில் பேசுவது போல சமூக வலைதளங்களில் ஆங்கிலத்தில் TEXT வருவது போல mono-acting மூலம் வீடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளார்.

மேலும் இவரின் mono-acting வீடியோக்களை பார்க்கும்போது. வீடியோக்கள் அனைத்தும் அருவறுக்கத்தக்க வகையிலும், ஆபாசமான வகையிலும் உள்ளது. இவ்வீடியோக்களை பார்க்கும் மாணவ, மாணவியர்கள் மற்றும் கல்லூரியில் படிக்கும் இளைஞர்களிடம் மீண்டும் வீடியோக்களை பார்க்க தூண்டி, பாலுணர்வுகளை தூண்டும் வகையிலும், கணவன், மனைவி உறவு முறை பற்றி ஆபாசமாகவும்,

மேலும் முதலிரவு பற்றிய வீடியோக்களை அனுப்பியும், பெண்களை பற்றி தவறாக சித்தரித்தும் mono-acting மூலம் பல வீடியோக்களை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்து Instagram -ல் 82,000-க்கும் மேற்பட்ட Followers மற்றும் YouTube-ல் 1,93.000 subscribers பெற்று உள்ளதால், இவரது வீடியோக்களைப் பார்க்கக் கூடிய குழந்தைகள், பெண்கள்: மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் இடையே பாலியல் தொடர்பான எண்ணங்கள்

ஏற்பட்டு பாலியல் குற்றச் செயலில் ஈடுபட வாய்ப்புள்ளது என்பதாலும், இதனால் இளைஞர் சமூதாயத்திற்கு சீர்கேடு ஏற்படும் வகையிலும், மேலும் பெண்களின் நாகரீகத்தை இழிவுப்படுத்தும் வகையில் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக திருச்சிராப்பள்ளி மாவட்டம் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் குற்ற எண் 32/23, U/s 292(a), 294(b), 509 IPC & 67, 67-A, 67-B of IT Act. & 4 r/w 6 of Indecent Representation of Women (Prohibition Act.)-ன் வழக்கு பதிவு செய்து, நேற்று (05.12.2023)-ஆம் தேதி எதிரியான இன்பநிதி-யை கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பட்டுள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *