திருச்சி மாவட்டம் துறையூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மதுராபுரி ஊராட்சியை துறையூர் நகராட்சி உடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 200-க்கும் மேற்பட்டோர் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். துறையூர் 1974 முதல் நகராட்சியாக இயங்கி வருகிறது.

தற்போது வரை துறையூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் கல்லூரிகளோ, தொழிற்சாலைகளோ இல்லை. மேலும் துறையூர் மக்களுக்கு வருமானம் ஏற்படுத்தும் வகையில் எந்த ஒரு சந்தை பகுதியோ இல்லை. எனவே இந்த நிலையில் துறையூர் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு திருச்சி, நாமக்கல், சேலம், திருப்பூர் சென்னை போன்ற நகரங்களையே நம்பி உள்ளனர்.

இந்நிலையில் துறையூர் நகராட்சியுடன் மதுராபுரி ஊராட்சியை இணைப்பதால் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் கட்டணம் போன்ற வரி உயர்வதால் தங்களது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் என்று மதுராபுரி ஊராட்சியை துறையூர் நகராட்சியுடன் இணைக்க கூடாது என்று 200க்கும் மேற்பட்டோர் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments