பொதுமக்கள் அஞ்சலிக்காக திருச்சியில் இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராமகோபாலனின் உடல் - 12 மணி அளவில் இறுதிச்சடங்குகள்!!

பொதுமக்கள் அஞ்சலிக்காக திருச்சியில் இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராமகோபாலனின் உடல் - 12 மணி அளவில் இறுதிச்சடங்குகள்!!

இந்துமுன்னணி பேரியக்கத்தின் நிறுவன அமைப்பாளர் வீரத்துறவி இராம.கோபாலன் அவர்கள் இறைவனடி சேர்ந்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு சளித்தொல்லை காரணமாக சென்னை ராமச்சந்திரமிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
முதல் பரிசோதனையில் கொரானா தொற்று இல்லை என்று தெரிய வந்தது. இரண்டாவதாக எடுத்த பரிசோதனையில் கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவரை நோய் தாக்கத்திலிருந்து மீட்க கடந்த இரு தினங்களாக மருத்துவர்கள் கடுமையாக போராடினர்.

Advertisement

இயல்பிலேயே போர்க் குணமிக்கவர் கோபால் ஜி. 1984 ல் பயங்கரவாதிகளின் தாக்குதலில் மறு அவதாரம் எடுத்தவர். அந்த மனோதிடம் அவரை நிச்சயம் மீட்டு விடும் என்று நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான இந்துமுன்னணி , RSS உள்ளிட்ட அனைத்து இந்து இயக்கங்களின் ஊழியர்களும் எதிர்பார்த்தனர்.ஆனால் இம்முறை அவரது வயது (94) காரணமாக சிகிச்சைகள் பலனளிக்கவில்லை.

வீரத்துறவி இராம கோபாலன் 19-9-1927 ல் தஞ்சை மாவட்டம் சீர்காழியில் பிறந்தவர். தமிழகத்தில் நிலவிய அசாதாரண இந்து விரோத சூழ்நிலையை கருத்தில் கொண்டு 1980 ம் ஆண்டு RSS ன் வழிகாட்டுதலில் இராம.கோபாலன் உருவாக்கிய இயக்கம் தான் இந்து முன்னணி .

இந்து முன்னணி வளர்ச்சிக்காக இராம கோபாலன் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்தார். தமிழகத்தில் அவர் கால் படாத ஊர்களே கிடையாது. 1984- ல் மதுரை ரயில் நிலையத்தில் இவர் மீது கொடூரத் தாக்குதல் நடந்தது. இதில் இவரது கழுத்திலும் தலையிலும் பலத்த வெட்டு. தழும்பை மறைக்க அன்றிலிருந்து காவித் தொப்பியணிய ஆரம்பித்தார் .ஆனால் இவை எல்லாம் அவரது தேசப் பணியை முடக்கவில்லை. பல மடங்கு உற்சாகத்துடன் இந்துமுன்னணி பேரியக்க கிளைகளை விதைத்தார்.

https://youtu.be/Jvx_Piv60ks
Advertisement

இந்நிலையில் இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராமகோபாலன் நேற்று சென்னையில் கோவிட் தொற்றால் காலமானார். அவருடைய உடல் தற்போது திருச்சி சீராத்தோப்பிலுள்ள இந்து பண்பாட்���ுக் கல்லூரி வளாகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. (01/10/2020) இன்று 12 மணி அளவில் அவருடைய இறுதி சடங்குகள் நடைபெறும் என இந்து முன்னணி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.