ஊரடங்கு காலத்திலும் 100க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு! அசத்தும் திருச்சி தனியார் நிறுவனம்!!

ஊரடங்கு காலத்திலும் 100க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு! அசத்தும் திருச்சி தனியார் நிறுவனம்!!

கொரோனா ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் சொல்லொணாத் துயரில் ஆழ்ந்துள்ளனர். சமுதாயத்தில் பலர் வேலையிழந்தும், சம்பளம் இன்மையாலும் தவித்து வருகின்றனர். இந்நிலையில் திருச்சியை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் இந்த ஊரடங்கு காலத்தில் பலருக்கு வேலை கொடுத்து நெகிழ்ச்சியை ஏற்படுத்திய தொகுப்புதான் இது!

திருச்சியில் 12 ஆண்டு காலமாக செயல்பட்டு வரும் நிறுவனம் VDart (P)Ltd. இந்த நிறுவனத்தில் 450க்கும் மேற்பட்ட நபர்கள் வேலை செய்து வருகின்றனர்.இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் தங்களுடைய ஊழியர்களை பாதுகாப்பாக வீட்டிலிருந்தே வேலை செய்ய அனுமதி அளித்து அவர்களுக்கு தேவையானவற்றையும் வழங்கி வரும் ஒரு நிறுவனம்.

இந்த பொதுமுடக்க காலத்திலும் 100க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு அளித்து அவர்களையும் வீட்டிலிருந்து பணி செய்ய வைத்து நெகிழ்ச்சியை ஏற்படுத்திய ஒரு நிறுவனம்.திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு பெங்களூரு, சென்னை மற்றும் அமெரிக்கா ஆகிய நகரங்களில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது இந்நிறுவனம்.மேலும் திருச்சியில் நடக்கும் சமுதாயம் சார்ந்த விழிப்புணர்வு கூட்டம் மற்றும் பல நிகழ்வுகளுக்கு கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து உதவும் நிறுவனம்.

Advertisement

இதுகுறித்து VDart நிறுவனத்தின் மனிதவள மேலாளர் மோகன சுந்தரத்திடம் பேசினோம்…இந்த ஊரடங்கு காலத்தில் 100க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். திருச்சியில் 80 நபர்களும் பெங்களூரு மற்றும் சென்னையில் 15 நபர்களும் இந்த கொரோனா கால கட்டத்தில் வேலை வாய்ப்பைப் பெற்றுள்ளன. இவர்களுக்கு கணினி மற்றும் கைப்பேசி மூலமாக நேர்முகத் தேர்வுகள் நடத்தினோம். முதல் கட்டமாக 25 நபர்கள் இம்மாதத்திற்கான சம்பளத் தொகையை வாங்க காத்திருக்கின்றனர். மற்றவர்களுக்கு பயிற்சி அளித்து வருகின்றோம். இவர்கள் வேலை செய்ய தேவையான புதிய லேப்டாப், இன்டர்நெட் உள்ளிட்ட வசதிகளை நாங்களே வழங்குகிறோம். அடுத்தகட்டமாக ஒரு 30 நபர்களை தேர்வு செய்ய காத்திருக்கிறோம். இந்தக் கொரோனா காலகட்டத்தை இளைஞர்கள் தன்னம்பிக்கையோடு பயனுள்ள வகையில் பயன்படுத்தினால் கண்டிப்பாக வெற்றி வாகை சூடி வேலைவாய்ப்பு பெறலாம் என்கிறார் மோகன சுந்தரம்.

VDart நிறுவனத்தின் மனிதவள மேலாளர் மோகன சுந்தரம்.

வேலையின்மையால் பலர் வாடிக் கொண்டிருக்கும் சூழ்நிலையிலும் கூட 100க்கும் மேற்பட்டோருக்கு வேலை அளித்து நம்முடைய திருச்சியை சேர்ந்த நிறுவனம் உண்மையிலேயே பாராட்டுக்குரிய ஒன்று! VDart நிறுவனத்திற்கு திருச்சி விஷன் சார்பாக வாழ்த்துக்கள்.