நோயாளிகளின் ஒற்றைப் புன்னகை பல நூறு விருதுகளுக்கு சமம் -செவிலியர் ஜெயபாரதி

நோயாளிகளின் ஒற்றைப் புன்னகை பல நூறு விருதுகளுக்கு சமம் -செவிலியர் ஜெயபாரதி

 


அன்பு,கருணை,இரக்கம் சகிப்புத்தன்மை இவைதான் செவிலியர் வேலைக்கான முதல் நிலை தகுதி. 
உலகமே தன் உயிருக்கு பயந்து போராடிக் கொண்டிருக்கும் நிலையில் முன்கள பணியாளர்களாக சுயநலமில்லாமல் மருத்துவர்களோடு  இணைந்து 21ஆம் நூற்றாண்டின்  உண்மையான போராளிகளாக போராடிக்கொண்டிருக்கும் களப் போராளிகள் தான் செவிலியர்கள். உலகம் முழுவதும் மே 12ஆம் நாள்  செவிலியர்கள் தினம் கொண்டாடப்படுகிறது ஆனால் இந்த தினத்தைக் கூட மகிழ்ச்சியாக எங்களால் கொண்டாட முடியவில்லை மக்கள்  கதறிக் கொண்டு இருக்கும்போது கொண்டாட்டங்கள் எங்கள் நினைவில் கூட வரவில்லை என்கிறார் திருச்சி  அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மூத்த செவிலியர் ஜெயபாரதி அவர்கள்.


 ஒரு செவிலியராக தன்னுடைய 28 ஆண்டு கால பயணத்தை நம்மோடு பகிர்ந்துள்ளார்,மருத்துவம் தாண்டி சேவை சகிப்புத்தன்மையோடு செய்ய இயலும் ஒரு வேலை என்றால் எனக்கு முதலில் நினைவுக்கு வந்தது செவிலியர்கள்.  பள்ளி படிப்பை முடித்த எனக்கு  சேவையை செய்ய செவிலியர் பணி சிறந்ததென்று  செவிலியராக என் வாழ்க்கை  பயணத்தை தொடங்கினேன். முதன்முதலில் பணியாற்றிய இடம் சென்னையில்  தாம்பரம் மருத்துவமனை   எய்ட்ஸ் மற்றும் காச நோயாளிகள்  பிரிவில் பணியாற்றியபோது அங்கு      நெஞ்சக நோய் பிரிவில் பணியாற்றிய  மருத்துவர்    தெய்வநாயகம் அவர்கள் நோயாாளியிடம் காட்டிய கருணையையும்,  நெஞ்சக நோய் பிரிவில் சளி போன்றவற்றை கையால் தொட்டு  நோயாளிகளுக்கு அவர்களுடைய நோய் தன்மையை கண்டறிந்தார் இப்படி ஒரு சகிப்புத்தன்மையினை  பார்த்தே  என் வாழ்க்கை தொடங்கியது இன்றைக்கு வரைக்கும் எப்பொழுதாவது நான் சோர்ந்தால் கூட அவருடைய முகமே கண்முன் தோன்றும்.
28 கால சேவை பணியில் கடந்த இரண்டு ஆண்டுகள் என்பது என் வாழ்வில் மறக்க இயலாத காலங்கள்.கிட்டத்தட்ட இரண்டாவது அலை தொடங்கிய கடந்த 3 மாதகாலமாக என் குடும்பத்தையும் மறந்து தான் இந்த பணியை செய்துக் கொண்டிருக்கிறேன். 
இந்த காலகட்டம் என்பது மிகவும் சவாலான ஒன்று.  


ஒரு செவிலியர் ஆக நான் மக்களிடம் எதிர்பார்ப்பதும் அவர்களிடம் வைக்கும் கோரிக்கையும் இது மட்டுமே, வேலை செய்து விட்டு வீட்டிற்கு திரும்பும் பொழுது மக்கள் முக கவசம் கூட இல்லாமல் பொது வெளியில் நடந்து செல்வதை பார்க்கும் பொழுது நெஞ்சம் பதைபதைக்கிறது முதல் அலையில்  எப்படியோ மக்களை காப்பாற்றிவிட்டோம். அந்த மனநிலையில் இரண்டாவது அலையும் கட்டுக்குள் வைத்து இருப்போம் என்று அவர்கள் நம்புகிறார்கள் எங்களால் முடிந்த வரை முயற்சி செய்து கொண்டு தான் இருக்கிறோம் ஆனால் மக்களின்ஒத்துழைப்பின்றி எங்களால் எதுவும் செய்ய இயலாது.
முக கவசம் அணிதல் சமூக இடைவெளியை பின்பற்றுதல் காலையில் எழுந்தவுடன்  ஒரு மூச்சுப் பயிற்சி, யோகா பயிற்சி,  நடைப்பயிற்சி, போன்றவற்றை மேற்கொள்ளுங்கள்.
 கபசூரகுடிநீர்  காசாயம் எதிர்ப்பு சக்தி தரும் எதையேனும் ஒன்றை குடியுங்கள் .
  இரவு நேரங்களில் மஞ்சள் சுக்கு பால் கலந்து குடியுங்கள்.
 முதல் அலையில்  60 வயதிற்கு மேற்பட்டவர்களில் அதிகம் பாதிக்கப்பட்டனர்.  ஆனால் இரண்டாவது அலையோ காய்ச்சல் இருமல் எந்தவித அறிகுறியும் இன்றி நேரடியாக நுரையீரலைப் பாதிக்கிறது இதனால் எல்லா வயதினரும் பாதிக்கப்படுகின்றனர் 10 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கூட பாதிக்கப்பட்டு மரணிக்கும் போது அவர்களுடைய முகங்கள் எங்கள் இதயத்தை  உறைய செய்கிறது. 
நம்  தாத்தா பாட்டி தலைமுறைக்கு இருந்த எதிர்ப்பு சக்தி நம் தந்தைகளுக்கு இல்லை   தந்தையையுடைய  எதிர்ப்பு சக்தி இப்பொழுது இருக்கும் குழந்தைகளுக்கு இல்லை இந்த சூழலில் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள இந்த போர் காலத்தில் நம்மைப் போர்க்களத்தில் நிறுத்துவதைவிட  பாதுகாப்பாக வைத்துக்கொள்வது போர்க்களத்தில் நின்று போராடும் எங்களை போன்ற செவிலியர்களுக்கு நீங்கள் செய்யும் மிகப்பெரும் உதவி . 

செவிலியராக பயின்று கொண்டிருக்கும் மாணவர்களுக்கு மூத்த செவிலியராக நான் கூறும் அறிவுரை ஒன்றே ஒன்றுதான் மக்களைக் காக்கும் சேவையில் உங்களை முன் நிறுத்துவதற்கும்  இந்த சேவைக்குரிய கல்வியைத் தொடங்கி இருக்கிறீர்கள் நீங்கள் உங்களிடம் இருக்கும் தயக்கங்களையும் பயத்தையும் உடைத்தெறிந்து வெளியில் வரவேண்டும் இன்றைக்கு நீங்கள் இந்த துறையை தேர்ந்தெடுத்ததே   வெற்றி காண ஒன்று அதிலும் நீங்கள் வெற்றி பெற்று போர்க்களத்தில் வெற்றி பெற வேண்டும் என்றால்  வரும் நோயாளிகளினை  நம்முடைய உறவாகவே கருதவேண்டும்  தாயாக, தந்தையாக ,அண்ணனாக தாத்தா பாட்டி என்று நம் உறவாக நினைத்தால் அவர்களுக்கு செய்வது சேவையாய் இல்லாமல்  அது நம்முடைய பணிதான் என்ற உணர்வு உள்ளூர வந்துவிடும்.

 அரசிற்கும் செவியிலியர்கள்  வைக்கும் ஒரு அன்பு கோரிக்கையை இது மட்டுமே இன்றைக்கு கொரோனாவில் முன்கள  போராளிகளாக போராடிக்கொண்டிருக்கும் எங்களை போன்ற செவிலியர்கள் எத்தனையோ பேர் மரணித்துக்கொண்டிருக்கிறார்கள்  அவர்கள்  மரணத்திற்கு இழப்பீட்டுத் தொகையும்,செவிலியர்கள் அனைவருக்கும்  பணி பாதுகாப்பும் வழங்க வேண்டும்.
1212  செவிலியர்களை பணி நிரந்தரம் செய்துள்ளீர்கள் இதே போன்ற பல மருத்துவ கல்லூரிகளில் இன்னும் கூடுதலான   பணியாட்கள்  தேவைப்படுகின்றன.நாளுக்கு நாள் தமிழகத்தில் ஏன் உலக அளவில் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது ஆக்சிஜன் படுக்கை  பற்றாக்குறை ஏற்படுகிறது மக்கள் சாலைகளில் படுக்கை இல்லாமல் கதறும்வதை பார்க்கும் பொழுது ஒரு நிமிடம் நெஞ்சம்  உறைந்து விடுகிறது. மக்களுக்காக பணியாற்ற  நீங்களும் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பரிசிலிணை செய்யுங்கள்  என்றும் கேட்டுக் கொள்கிறோம்.
இன்றைக்கு இந்த பேரிடர் காலத்தில் தங்களை பாதுகாத்துக் கொள்ளவே மக்கள் தயங்கும் பொழுது மக்களுக்காக பணியாற்றும் நாங்கள் மக்களை காப்பாற்றுவதற்கு ஒவ்வொரு நாளும் போராடிக்கொண்டிருக்கிறோம் இந்த சேவையை தொய்வில்லாமல் செய்வதற்கு முக்கிய காரணம் அத்தனை சவால்களையும் மீறி ஒரு நோயாளி குணமடைந்து  வீட்டிற்கு செல்லும்போது அவர்கள் முகத்தில் காணும் ஒற்றைப் புன்னகை. அப்புன்னகையை ஒவ்வொரு நோயாளியின் முகத்திலும் மீட்டெடுக்க எங்கள் வாழ்வை அர்ப்பணித்து போராடிக் கொண்டிருக்கிறோம்  என்று பெருமையோடு புன்னகைத்தார் இந்நூற்றாண்டின் நிஜப்போராளியான மூத்த செவிலியர் ஜெயபாரதி.

போர்க்களத்தில் போரிட்ட போர் வீரர்களுக்கு மருந்து வைத்து இறப்பு விகிதத்தை குறைத்த மாபெரும் பெருமைக்குரிய  புளோரன்ஸ் நைட்டிங்கேல்  நினைவாகவே  செவிலியர் தினம் கொண்டாடப்படுகிறது .
   21ம் நூற்றாண்டில்  நடந்து கொண்டிருக்கும் இந்த போரில் மக்களின் உயிரை காப்பாற்ற போராடிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு  செவிலியர்களும்  புளோரன்ஸ் நைட்டிங்கேலின் மறு உருவத்தில் வாழும் தேவதைகளே !

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Hb7keSxfvguFoCh6GAszzd