தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான திருச்சி புறநகர் மாவட்டம் சார்பாக மாற்றுத்திறனாளிகளை அவமானப்படுத்திய கருத்து கூறிய நடிகை குஷ்பு மீது வழக்கு பதிவு செய்ய வேண்டி திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நடிகை குஷ்பு காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அவர் சென்னை விமான நிலையத்திற்கு பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது காங்கிரஸ் கட்சியை மூளை வளர்ச்சியில்லாத கட்சி என அரசியல் எதிரிகளை தாக்குவதற்காக பயன்படுத்திய வார்த்தை மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி அவமானப்படுத்தும் சிறுமைப்படுத்தும் விதத்திலான கருத்தாகும் எனவும், மேலும் ஊனமுற்றோர் உரிமைகள் சட்டம் 2016 பிரிவு 92 (9)ன்படிஉள்நோக்கத்துடன் மாற்று திறனாளிகளை அவமானப்படுத்தும் வகையில் பொதுவெளியில் பேசுவது தண்டனைக்குரிய குற்றமாகும் எனவும், குற்றத்திற்கு 5 ஆண்டுகள்வரை சிறை தண்டனையும் அபராதமும் விதிக்க சட்டத்தில் இடமுண்டு, அவர் கூறிய கருத்திற்கு இதுவரை மன்னிப்போ அல்லது வருத்தமும் தெரிவிக்கவில்லை என்றும் இதனால் அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி
Advertisement
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான திருச்சி புறநகர் மாவட்ட தலைவர் குமார் தலைமையில் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் இன்று புகார் அளித்தனர். புகார் மனுவை சப் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். பின்னர் கலைந்து சென்றனர் முன்னதாக குஷ்பு மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல் நிலையம் முன்பு கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Comments