திருச்சி மாவட்டம், சமயபுரம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மதுவிற்பனையில் ஈடுபட்ட நபர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவல்.
திருச்சி மாவட்டம், சமயபுரம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று (31.07.2025) மதியம் 02.30 மணியளவில் சமயபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சேவியர் அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது புள்ளம்பாடி வாய்க்கால் அருகே ராபர்ட் (44),முத்தமிழ்செல்வன் (51) ஆகியோர் தள்ளுவண்டி கடை ஒன்றில் சட்டவிரோதமாக அரசு மதுபான பாட்டில்களை சில்லறை விற்பனைக்காக மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
இவர்களிடம் இருந்து சில்லறை விற்பனைக்காக மறைத்து வைத்திருந்த 10 அரசு மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டது. மேலும், ராபர்ட் மற்றும் முத்தமிழ்செல்வன் ஆகியோரை சமயபுரம் காவல் நிலைய காவலர்களால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
இது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் பற்றிய தகவல் தெரிவிக்க 8939146100 என்ற 24 மணிநேரமும் செயல்படும் மாவட்ட காவல் அலுவலக உதவி எண்ணை அழைக்கலாம் என திருச்சி மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
Comments