துறையூரில் கட்டுமான பொறியாளர் சங்கத்தின் சார்பாக பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்ற கோரி முழக்கங்கள் எழுப்பி துறையூர் வட்டாட்சியரிடம் கோரிக்கை மனுவளித்தனர்.
திருச்சி மாவட்டம், துறையூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட துறையூர் கட்டுமான பொறியாளர் சங்கத்தின் சார்பாக கிரஷர் பொருட்களின் விலை உயர்வை ரத்து செய்யவும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர், மனுவில் கல்குவாரி, கிரஷர்
உரிமையாளர்கள் எம்சாண்ட், பிசாண்ட், ஜல்லி கற்கள் போன்றவற்றின் விலையை தொடர்ந்து உயர்த்தி வருகிறார்கள், கடந்த ஒன்றை ஆண்டுகளில் கல்குவாரி பொருட்கள் யூனிட் ஒன்றுக்கு ரூபாய் 3000 வரை உயர்த்தி உள்ளதாகவும் குற்றம் சாட்டி விலை உயர்வை ரத்து செய்யக் கோரியும், ஆற்று மணல் குவாரிகளை உடனடியாக திறக்க கோரியும், கட்டுமான பொருட்களின் விலை உயர்வை
கட்டுப்படுத்த ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க கோரியும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் செய்ததை தொடர்ந்து கோரிக்கை மனு அளித்தனர், சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் கையில் பதாகைகளை கையில் ஏந்தியும், தமிழக அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பியும் முசிறி – துறையூர் பிரிவு சாலையில் இருந்து துறையூர் வட்டாட்சியர் அலுவலகம் வரை ஊர்வளமாக சென்று கோரிக்கை மனு அளித்தனர், இதனால் துறையூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments