திருச்சி மாநகரில், கோட்டை இரயில் நிலையம் அருகே அமைந்துள்ள மேரிஸ் மேம்பால மறுகட்டுமானப் பணி தாமதமாக நடைபெற்று வருகிறது, விரைந்து முடிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு மாண்புமிகு ஒன்றிய இரயில்வே துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் அவர்களை புதுதில்லியில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (19.12.25) சந்தித்து கடிதம் வழங்கி விரிவாக எடுத்துரைத்தேன்.

அக்கடிதத்தில், திருச்சி கோட்டை இரயில் நிலையம் அருகில், இரயில்வே கி.மீ. 137/000 இல் அமைந்துள்ள தற்போதைய சாலை மேம்பாலம் (மேரிஸ் மேம்பாலம்) எண் E.17இன் மறுகட்டுமானப் பணிகள் தாமதமாக நடைபெற்று வருகிறது. மேரிஸ் மேம்பாலம் மார்ச் 2024 தொடங்கிய மறுகட்டுமானப் பணிகள் தற்போது இறுதி நிலையை எட்டியிருக்க வேண்டும். இடையில் பழைய பாலத்தை அகற்றும் பணியில் ஏற்பட்ட தொய்வு நிலையையும் எனது தொடர் அழுத்தம் காரணமாக பழைய பாலம் அகற்றும் பணியை ரயில்வே நிர்வாகம் செய்து முடித்தது.

தற்போது ரயில்வே நிர்வாகத்தால் மேற்கொள்ளப்படும் கட்டுமான பணிகளில் மீண்டும் தொய்வு நிலை ஏற்பட்டுள்ளதை அறிந்து, இந்தப் பணிகளை செயல்படுத்தும் துறைகளுடன் நான் தொடர்ச்சியான மேற்கொண்டுவரும் தொடர்புகளின் மூலம், ஒப்பந்ததரின் செயல்திறன் குறைபாடுகள் குறித்து அறிய முடிந்தது. தற்போது பணிகளின் தொய்வு நிலைக்கும் அதுவே காரணமாகவும் உள்ளது. மேலும், அடுத்த கட்ட கட்டுமான பணிகளுக்கான இரும்பு தேவை இருப்பதை அறிய முடிந்தது. இந்த கொள்முதல் SAIL( Steel Authority of India) மூலமாக பெறபடவேண்டும் என்றும் தெரிவிக்கபட்டது.

இதையடுத்து SAIL கிளை விற்பனை அலுவலக மேலாளருக்கு விரிவானதொரு கடிதம் எழுதினேன். SAIL கிளை விற்பனை நிறுவனத்திற்கு ஒப்பந்ததாரர் செலுத்த வேண்டிய பணம் நிலுவையில் உள்ளதால் இரும்பு (Steel) கொள்முதல் செய்ய வேண்டிய பணி காலதாமதம் ஆகிறது என்று எனக்கு அவர்கள் பதிலளித்துள்ளார்கள்.

ஒப்பந்ததாரரின் இந்த தொடர் அலட்சிய போக்கையும், பணிகள் மேலும் தாமதப்படாமல் மேரிஸ் மேம்பால பணியை விரைந்து முடிக்க அமைச்சகம்
உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டேன்.

மேலும், மேம்பால மறுகட்டுமான பணிகளில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக தினசரி பயணம் மேற்கொள்ளும் ஆயிரக்கணக்கான பொதுமக்களை கடுமையாகப் பாதித்துள்ளது. குறிப்பாக, பள்ளி, கல்லூரி மாணவர்கள், வணிகப்பெருமக்கள் மற்றும் இந்த சாலையை பயன்படுத்தும் அனைவருமே, தற்போது நீண்ட மற்றும் காலதாமதமாகும் மாற்றுப் பாதைகளை பயன்படுத்தத் நிர்பந்திக்கப்பட்டுள்ளனர்.

திருச்சி கோட்டை இரயில் நிலையம் அருகில் அமைந்துள்ள தற்போதைய சாலை மேம்பாலம் (மேரிஸ் மேம்பாலம்)
திருச்சி மாநகரத்தின் இதய பகுதியாக அமைந்துள்ளதால் காலதாமதம் ஆகாமல் குறித்த நேரத்திற்கு இப்பணியை விரைந்து செய்து முடிக்க பொதுமக்களின் நலன் கருதி ஒப்பந்ததாரருக்கு உரிய வழிகாட்டுதலை அமைச்சகம் வழங்குமாறு எனது கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறேன்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments