“முதன் முதலாக 1859-ஆம் ஆண்டில் மெட்ராஸ் மாவட்ட காவல் சட்டத்தை நிறைவேற்றி நவீன மற்றும் அமைப்பு ரீதியான காவல்துறை தோற்றுவிக்கப்ட்ட நாளான செப்டம்பர் 6-ஆம் நாள் ஆண்டு தோறும் காவலர் தினமாக கொண்டாட தமிழ்நாடு அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது”. இதன் படி இன்று (06.09.2025) காலை 07:00 மணியளவில் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செ. செல்வநாகரெத்தினம், இ.கா.ப., அவர்கள் உறுதிமொழி வாசிக்க, காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் சுமார் 80 பேர் ‘காவலர் தின உறுதிமொழியை’ ஏற்றுக்கொண்டனர்.
அதனை தொடர்ந்து, காவல்துறையில் பணியின் போது உயிர்நீத்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக திருச்சி மாவட்ட ஆயுதப்படையில் அமைக்கப்பட்டுள்ள நினைவு ஸ்தூபிக்கு திருச்சி மாநகர் காவல் ஆணையர் திருமதி. காமினி, இ.கா.ப., திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செ. செல்வநாகரெத்தினம், இ.கா.ப., திருச்சி மாநகர தெற்கு சரக துணை ஆணையர் திரு. ஈஸ்வரன் மற்றும் அதிகாரிகள் மலர்வளையம் வைத்து தங்களது மரியாதையை செலுத்தினர். அது சம்மந்தமான கவாத்து திருச்சி மாவட்ட ஆயுதப்படை ஆய்வாளர் தலைமையில் நடத்தப்பட்டது.
அதன்பின்பு, ஆயுதப்படை மைதானத்தில் காவல்துறையில் பயன்படுத்தக்கூடிய அனைத்து வகையான துப்பாக்கிகள், காவல்துறை வரலாறு சம்மந்தமான பதாகைகள், சைபர் கிரைம் மற்றும் பெண்களுக்கெதிரான குற்றங்கள் சம்மந்தமான விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டு கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சியை, திருச்சி மாநகர கே.கே.நகர் பகுதியில் உள்ள புனித அந்தோணியார் மெட்ரிக்குலேசன் பள்ளியிலிருந்து சுமார் 50 மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் கண்டுகளித்தனர்.
மேலும், காவல்துறையினரின் குழந்தைகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தி, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களால் பரிசுகள் வழங்கப்பட்டது. முடிவாக, திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செ. செல்வநாகரெத்தினம், இ.கா.ப., அவர்கள் காவலர் தினத்தை விளக்கும் விதமாக, அங்கு வந்திருந்த காவலர்கள், பள்ளி மாணவ மாணவியர்கள், ஆசிரியைகள் மற்றும் பொதுமக்களுக்கிடையே ஒரு சிறு உரையாடல் நடத்தி, காவலர் தினத்தின் முக்கியத்துவத்தை விளக்கினர். முடிவில், அனைவருக்கும் சிறிய தேநீர் விருந்து அளிக்கப்பட்டு, காவலர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments