ஸ்ரீரங்கம் வ உ சி தெருவில் அமைந்துள்ள வயதான பிராமணர் தம்பதி வீட்டில் (பிராமணாள்) போல் வேடமிட்டு வீட்டில் உள்ளவர்களிடம் பழகி உங்களுக்குத் தெரிந்த பிராமண பெண்கள் திருமணத்திற்கு உள்ளனரா? எனக்கு இடம் வாங்க வேண்டும் என்பது போல் நட்புடன் பழகி வந்துள்ளார்.

அப்பொழுது பெரியவர் மட்டும் வீட்டிலிருந்த போது அவரது மனைவி மருத்துவமனைக்கு சென்று இருந்த வேளையில் எனக்கு கட்டிக்கொள்ள வேஷ்டி வேண்டுமென்று அந்த வீட்டில் உள்ளவர்களிடம் இவர் கேட்டுள்ளார். அப்பொழுது நம் வீட்டிற்கு அடிக்கடி வருபவர் தானே என்று பீரோவை திறந்து வேஷ்ட்டியை எடுத்துக் கொடுக்கும் வேளையில் பீரோவில் உள்ள 10 பவுன் நகை 15,000 பணத்தை

எடுத்துக் கொண்டு ஓடி உள்ளான் அந்த திருடன். வீட்டில் உள்ள பெரியவர் மற்றும் மேலும் அங்கு இருந்த இரண்டு பெண்கள் அவனை துரத்திக் கொண்டு ஓடி வந்தனர். அருகில் இருந்தவர்கள் அதனை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அப்பொழுது அங்கிருந்த ஆட்டோ டிரைவர்கள் அவனை துரத்தி பிடித்து விட்டனர்.

அங்கிருந்த காவல் நிலைய அதிகாரி சிந்துநதி திருடனை உடனடியாக கைது செய்து நகைகளையும் பணத்தையும் மீட்டார். சிறிது நேரத்திலேயே திருடனை பிடித்துக் கொடுத்த ஆட்டோ டிரைவர்களை குற்றப்பிரிவு காவல் ஆவாளர் அதிகாரி சிந்து நதி பாராட்டி கௌரவித்தார்.
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
திருடனை துரத்திப் பிடித்த ஆட்டோ டிரைவர்கள் – பாராட்டிய காவல் ஆய்வாளர்



Comments