கடந்த (30.10.24) அன்று திருச்சி மாவட்டம் ஜுயபுரம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட அந்தநல்லூர் சிவன் கோயில் படித்துறையில் அருகே ராக்கெட் லாஞ்சர் ஒன்று கிடப்பதாக ஜீயபுரம் காவல் துறையினருக்கு தகவல் வந்தது. தகவலையடுத்து போலீசார் விரைந்து அப்பகுதிக்கு சென்று ராக்கெட் லாஞ்சரை கைப்பற்றினர்.
பின்னர் ஆற்று மணலுக்குள் வைத்து பாதுகாப்பாக வெடிகுண்டு செயல் இழக்க நிபுணர்கள் வைத்து வெடிக்க செய்தனர். அந்த பரபரப்பு அடங்குவதற்குள் அடுத்த இரண்டாவது ஒரு ராக்கெட் லாஞ்சர் அதே பகுதியில் சற்று தூரம் தள்ளி காவிரி ஆற்றின் ஓரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனை மண்ணுக்குள் தற்பொழுது பாதுகாப்பாக புதைத்து வைத்துள்ளனர்.
வெடிகுண்டு செயலிழக்கும் நிபுணர்களை வைத்து அதனை வெடிக்க செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். மீண்டும் இரண்டாவது ராக்கெட் லாஞ்சர் அதே பகுதியில் கிடைத்துள்ளதால் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments