திருச்சி மாவட்டம், லால்குடி அருகே, கல்லக்குடி மின்வாரியத்தில் இளநிலை பொறியாளராக பணியாற்றி வருபவர் ஸ்ரீதர் (56). கல்லக்குடி, புதிய சமத்துவபுரம் பகுதி மக்கள், அங்குள்ள முத்துமாரியம்மன் கோவிலுக்கு மின் இணைப்பு கேட்டு, மின்வாரிய அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
ஆனால், ‘வி.ஏ.ஓ., மற்றும் தாசில்தார் போன்ற வருவாய்த் துறையினர் தடையில்லா சான்று வழங்கி ஒப்புதல் அளித்தால் தான், மின் இணைப்பு தரமுடியும்,’ என்று மின் இணைப்பு கோரி மனு கொடுத்தவர்களிடம் ஆவேசமாக பேசிய இளநிலை பொறியாளர் ஸ்ரீதர், மாவட்ட கலெக்டரின் சட்டையை பிடித்து, கன்னத்தில் அறைந்து அனுமதி வாங்கிட்டு வா,’ என்று தரக்குறைவாகவும் பேசி உள்ளார். அந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலானது.
இது பற்றி விசாரணை நடத்திய மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் பிரகாசம், மாவட்ட கலெக்டரை தரக்குறைவாக பேசிய இளநிலை பொறியாளர் ஸ்ரீதரை, சஸ்பெண்ட செய்து உத்தரவிட்டுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் லஞ்சம் வாங்கிய புகாரில் இவர் சிக்கியவர் எனக் கூறப்படுகிறது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn




            
            
            
            
            
            
            
            
            
            


Comments