தமிழ்நாடு மின் பகிர்மான கழகம்
அனுப்புநர்
பொறிஞர். கா.முத்துராமன், பி.இ.,
செயற் பொறியாளர்,
இயக்குதலும் பராமரித்தலும்,
நகரியம் / திருச்சி.
பெறுநர்
இயக்குநர்
அகில இந்திய வானொலி நிலையம்,
திருச்சி.
ஆசிரியர், அனைத்து நாளிதழ்கள்
திருச்சி.

க.எண். செபொ/இகா/நக/திரு/வளரை/ கோ.செய்தி/எண். 332 /2026, நாள். 19.06.2026.
பருள் : மின்சாரம் – திருச்சி நகரியம் கோட்டத்திற்குட்பட்ட, திருச்சி 110 கி.வோ. கிரிட் துணைமின் நிலையத்தில் 20.06.2026 (சனிக்கிழமை) அன்று பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உத்தேசிக்கப்பட்டது – ஒத்தி வைக்கப்படுவது – தொடர்பாக.

பொதுமக்கள் மற்றும் நுகர்வோர் நலன் கருதி கீழ்கண்ட செய்தியை தங்கள் நாளிதழில் பிரசுரம் செய்யுமாறு / சேவை செய்தியில் அறிவிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
செய்தி
திருச்சி நகரியம் கோட்டத்திற்குட்பட்ட, திருச்சி 110 கி.வோ. கிரிட் துணைமின் நிலையத்தில் 20.06.2026 (சனிக்கிழமை) அன்று திட்டமிடப்பட்டிருந்த பராமரிப்பு பணிகள் நிர்வாக காரணங்களுக்காக ஒத்தி வைக்கப்படுகிறது.

எனவே, 20.06.2026 அன்று துணைமின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் நிறுத்தப்படாது என்பதையும் இத்துணைமின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் அனைத்து பகுதிகளுக்கும் வழக்கம் போல் மின்சாரம் வழங்கப்படும் என்பதையும் பொறிஞர். கா.முத்துராமன், செயற்பொறியாளர், இயக்குதலும் & காத்தலும், நகரியம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், திருச்சி, அவர்களால் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
நன்றி
தங்கள் உண்மையுள்ள,
[கையொப்பம்]
செயற்பொறியாளர்,
இ.கா./ நகரியம் / திருச்சி.
19.06.26

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments