திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தரைக்கடை வியாபாரிகள் குடும்பத்துடன் மனு கொடுக்கும் போராட்டம்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தரைக்கடை வியாபாரிகள் குடும்பத்துடன் மனு கொடுக்கும் போராட்டம்.

திருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளம் பகுதியில் 150க்கும் மேற்பட்டோர் பல ஆண்டுகாலமாக தரைக்கடை நடத்தி வியாபாரம் செய்து வருகிறார்கள்.

Advertisement

இது குறித்த வழக்கில் உயர்நீதிமன்றம் தரைக்கடை வியாபாரிகள் ஒழுங்குபடுத்தி வியாபார குழு அமைத்து அந்த இடத்தில் அல்லது மாற்று இடத்தில் வியாபாரம் செய்ய அனுமதிக்க தீர்ப்பு வழங்கிய நிலையில் தற்போது வரை எந்த ஒரு நடவடிக்கையும் மாவட்ட நிர்வாகத்தினால் எடுக்கப்படவில்லை..

ஏற்கனவே கொரோனா ஊரடங்கு காரணமாக வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலம் வருவதால் தங்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்றும், தங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தியும் திருச்சி மாவட்ட தரைக்கடை மற்றும் சிறுகடை வியாபாரிகள்(AITUC) சங்கத்தினர் குடும்பத்துடன் வந்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.