பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் – 100க்கும் மேற்பட்டோர் கைது
தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று மறியல் போராட்டம் நடைபெற்றது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், இது தொடர்பாக ஆராய தமிழ்நாடு அரசு சார்பில் மூன்று நபர் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு முழுமையாக செயல்பட்டதாக தெரியவில்லை.
அதனை காரணமாக வைத்து அந்த குழுவின் கால அளவை நீட்டிக்க கூடாது.
இடை நிலை ஆசிரியர்களிடமிருந்து பறிக்கப்பட்ட மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை மீண்டும் வழங்க வேண்டும்,
ஆசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பை தடுக்கும் அர்சாணை 243 ஐ ரத்து செய்ய வேண்டும்.
ஊதிய முரண்பாட்டை கலைய வேண்டும்.
தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கு தணிக்கை தடை என்கிற பெயரில் அவர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கி இருக்கிறார்கள். அதனை திரும்ப பெற வேண்டும்,
காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். அதில் நிரந்தர பணியில் ஆசிரியர்கள் அமர்த்தப்பட வேண்டும், ஓய்வுபெற்றால் ஏற்கனவே கல்வி ஆண்டு முடியும் வரை ஆசிரியர்கள் பணியில் இருப்பார்கள் ஆனால் தற்போது பணி ஓய்வு பெற்றால் உடனடியாக பணியில் இருந்து ஆசிரியர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்கிற அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் ஆசிரியர்கள் உடனடியாக பணியில் இருந்து விடுவிக்கப்படுவதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் எனவே கல்வி ஆண்டு முடியும் வரை ஓய்வு பெரும் ஆசிரியர்கள் பணியில் இருப்பதற்கு அறிவிப்பை வெளியிட வேண்டும்,
ஆசிரியர்கள் பதவி உயர்வு பெறுவது தொடர்பான தகுதி தேர்வு வழக்கு உச்ச நீதிமன்றத்திக் நிலுவையில் உள்ளது. அதனை விரைந்து முடிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆசிரியர்களிடம் உள்ளது இந்த 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மறியல் போராட்டம் நடைபெறுவதாக ஆசிரியர் நீலகண்டன் தெரிவித்தார்.
ப வடிவ வகுப்பறையில் நிறைய பிரச்சனைகள் உள்ளது மருத்துவர்கள் அது ஏற்புடையதல்ல என கூறுகின்றனர். பள்ளிக்கூட அறைகள் சின்னதாக உள்ளதால் கல்லூரிகளுக்கு வேண்டுமானால் அதை செயல்படுத்தலாம். கல்வி அமைச்சர் உரிய நடவடிக்கை எடுத்து பழைய நடைமுறையே தொடர வேண்டும் என்றார்.
அரசு எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் திட்டமிட்டபடி ஆகஸ்ட் மாதம் சென்னை கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்றார்.
நாங்கள் தேர்தல் பணிகளை புறக்கணிக்க மாட்டோம் ஆனால் தேர்தலில் எங்களது முடிவு இருக்கும் . பழைய ஓய்வூதியத் திட்டத்தில் 6 லட்சம் பேர் உள்ளனர் நாங்கள் நினைத்தால் ஆறு லட்சத்தை 60 லட்சம் ஆக மாற்ற முடியும் சில ஐஏஎஸ் அதிகாரிகளின் பேச்சைக் கேட்டுக் கொண்டு அரசு செயல்படுகிறது கலைஞர் ஆசிரியர்களுக்கு நிறைய செய்தார் ஜெயலலிதவும் செய்துள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருக்கும் பொழுது ஆசிரியர் அரசு ஊழியர்களை பகைத்துக் கொண்டதால் தான் நாம் தோற்றோம் எனக் கூறியுள்ளர்.
ஆகையால் தேர்தல் வரும் பொழுது எங்களது முடிவு தெரியும் என்றார்
Comments