நாளை முதல் திருச்சியில் களத்தில் இறங்கும் தனியார் பேருந்துகள்!! தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தகவல்:
கோவிட்- 19 தொற்றால் பொதுமுடக்க நடவடிக்கையாக கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் தமிழகத்தில் தனியார் பேருந்துகள் இயங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கிட்டத்தட்ட 4600 பேருந்துகள் சென்னை தவிர மற்ற பகுதிகளில் ஏற்கனவே இயங்கி கொண்டிருந்தன .அதில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓட்டுனர்கள், நடத்துனர்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள் பணியாற்றினர். இந்த நிலையில் அவருடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.இதையடுத்து இன்று திருச்சியில் தனியார் பேருந்து உரிமையாளர் சங்க தலைவர், செயலாளர்,பொருளாளர் ஆகியோர் காணொலி மூலம் கூட்டம் நடத்தி அதன் பிறகு நாளை முதல் தனியார் பேருந்துகளை இயக்க முடிவெடுத்தனர்.
பின்னர் தனியார் பேருந்து உரிமையாளர் சங்க செயலாளர் தர்மராஜ்
தகவல் தெரிவித்த போது தமிழகத்தில் திருவள்ளூர் ,காஞ்சிபுரம், செங்கல்பட்டு தவிர மற்ற மாவட்டங்களில் அந்த குறிப்பிட்ட மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தனியார் பேருந்துகள் இயங்கும். தமிழகம் முழுவதும் சென்னையை தவிர 4600 பேருந்துகள் உள்ளன. தற்போது இந்த மூன்று மாவட்டங்களை தவிர்த்து 4400 பேருந்துகள் நாளை முதல் தமிழக அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடித்து இயக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் மத்திய அரசிடம் வைத்துள்ள கோவிட்-19 தொற்றால் தனியார் பேருந்துகள் மூன்று மாதம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மூன்று மாத காலத்திற்கான இன்சூரன்ஸ் நீட்டிப்பு செய்ய வேண்டும் என்ற
கோரிக்கையை உடனே பரிசீலனை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார் .அதேபோல் தமிழக அரசிடம் தனியார் பேருந்துகளுக்கான சாலை வரியை ரத்து செய்யவும் வேண்டுகோள் வைத்துள்ளார்.
இந்நிலையில் நாளை முதல் தனியார் பேருந்துகள் இயங்கும் என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளனர்.