திருச்சி அருகே கஞ்சா விற்ற பிரபல கஞ்சா வியாபாரியை திருவெறும்பூர் மதுவிலக்கு பிரிவு போலீசார் கைது செய்தனர்.திருவெறும்பூர் மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு திருச்சி அருகே உள்ள புங்கனூர் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது
அதன் அடிப்படையில் அந்த பகுதியில் திருவெறும்பூர் மதுவிலக்கு பிரிவு போலீசார் அதிரடியாக அந்த பகுதியில் கண்காணித்த போதுபுங்கனூர் உருண்ட மலை பின்புறம் பாறைக்குழி அருகே புங்கனூர் காந்திநகர் சேக் மைதீன் காலனியைச் சேர்ந்த மெய்யப்பன் (33) என்ற பிரபல கஞ்சா வியபாரி கஞ்சா விற்றுக் கொண்டிருந்த பொழுது கையும் களவுமாக மதுவிலக்கு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவனிடம் இருந்து ஒரு கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ12 ஆயிரத்து 500 ஆகும். அதன் அடிப்படையில் மெய்யப்பன் மீது திருவெறும்பூர் மதுவிலக்கு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து திருச்சி ஆறாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி உத்தரவின் படி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
ஏற்கனவே மெய்யப்பன் மீது பல கஞ்சா வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
https://t.me/trichyvision
Comments