திருச்சி
திருவெறும்பூர்
கல்லூரி முன்பு இந்திய மாணவர் சங்கம் சார்பில் எல் ஓ சி எஃப் வரையறையின்றி திரும்ப பெற வழியுறுத்தி யூஜிசி அறிக்கை மற்றும் பிரதமர் மோடியின் உருவ படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட 50 கல்லூரி மாணவர்கள் மீது திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு
திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் உருமு தனலெட்சுமி கல்லூரி முன்பு இந்திய மாணவர் சங்கம் மாவட்ட துணை செயலாளர் ஆர்த்தி, கிளை தலைவர் அபி ஆகியோர் தலைமையில் கல்லூரி முன்பு மத்திய அரசு அறிவியலுக்கு புறம்பான மற்றும் காவி மயத்தை திணிக்கும் பல்கலைக்கழக மானிய குழுவில் எல் ஓ சி எப் வரையறை இன்றி திரும்ப பெற வலியுறுத்தி யுஜிசி அறிக்கை மற்றும் பாரதபிரதமர் மோடியின் உருவ படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தப் போராட்டத்தில் இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகளும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்
இந்த நிலையில் இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து பிரதமர் மோடி உருவப்படத்தை எரித்து தொடர்பாக பாஜக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் செந்தில்குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த 50 பேர் மீது திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision
Comments