மலைக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் திருச்சியின் மிகப்பெரிய வர்த்தக நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. திருச்சி மலைக்கோட்டை மற்றும் காந்தி மார்க்கெட், பெரியகடைவீதி ஆகியவற்றை இணைக்கும் பாபுரோடு பகுதியில் செயல்பட்டுவரும் டாஸ்மாக் மதுபானகடையால் அங்கு மது அருந்தவரும் மதுபிரியர்களால் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள், பொதுமக்கள் நாள்தோறும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர், இங்கு 24 மணி நேரமும் மதுபான கடை சட்ட விரோதமாக இயங்கிவருகிறது.
அங்குவரும் வாடிக்கையாளர் சிலர் மதுபோதையில் சாலையில் நின்றுகொண்டு ஆபாச வார்த்தைகளில் பேசுகின்றனர். இதனால், அப்பகுதியில் உள்ள மருத்துவமனைகள், பள்ளி – கல்லூரிகள் உள்ளிட்டவற்றுக்கு சென்று வரும் பொதுமக்கள் அச்சமடைகின்றனர். மேலும், மதுக்கடை வாடிக்கையாளர்களில் சிலர் வழிப்பறி உள்ளிட்ட குற்றச்சம்பவங்களிலும் ஈடுபடுகின்றனர். இதனால் மதுகடையை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர்.
எனவே குடியிருப்புகள் மற்றும் மருத்துவமனை, கோயில்கள், பள்ளிவாசலுக்கு மிக அருகில் உள்ள இந்த மதுபான கடையை உடனடியாக அகற்றக்கோரி 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திடீரென்று “டாஸ்மாக் கடையை மூடு” என்ற வாசகம் அடங்கிய பதாகையை கையில் ஏந்தி டாஸ்மாக் கடைக்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments