திருச்சி ரெயில்வே கோட்டத்தில் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களிலும் பயணிகளின் வசதிக்காக ரெயில்வே நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தற்போது ரெயில்வே நிர்வாகம் கியூ ஆர் குறியீடுறியீடு மூலம் பணம் செலுத்தும் முறையை அறிமுகம் செய்துள்ளது.

அதன்படி, திருச்சி ரெயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட திருச்சி, தஞ்சை உள்பட 94 முக்கிய ரெயில் நிலையங்களில் கியூ ஆர் குறியீடு மூலம் பணம் செலுத்தி முன்பதிவு இல்லா டிக்கெட்களை பெறும் வகையில் டிக்கெட் கவுண்ட் டர்கள் செயல்பட்டு வருகிறது. இந்த புதிய நடைமுறை மூலம் அனைத்து பயணிகளும் டிக்கெட்டுகளை எளிதாக பெற முடியும்.

இதனால் சில்லறைக்காக நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் நேரத்தை குறைக்கிறது. எனவே பயணிகள் அனைவரும் கியூ ஆர் குறியீட்டை பயன்படுத்தி, நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பதைத் தவிர்த்து ரெயில் டிக்கெட்டை எளிதாக பெறலாம் என்று திருச்சி ரெயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision




            
            
            
            
            
            
            
            
            
            


Comments