திருச்சி உய்யக்கொண்டான் திருமலையை சேர்ந்தவர் சினுக்கி என்கின்ற சின்னராஜா (25). இந்த வாலிபர் குடிபோதையில் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக, சினுக்கி என்கின்ற சின்னராஜாவை போலீசார் கைது செய்தனர். அவர் போலீஸாரிடம் பிடிபடும் முன்பு தப்ப முயன்றதால், கீழே விழுந்ததில் அவரது வலதுகாலில் முறிவு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட சினுக்கி என்கின்ற சின்ன ராஜாவை ஜாமினில் வெளிவராத பிரிவுகளில் சிறையில் அடைக்க வேண்டும். சின்ன ராஜாவின் பூர்வீக சொத்துக்களை ஜப்தி செய்து சிறுமியிடம் வழங்க வேண்டும். பெற்றோர் இல்லாத சிறுமியின் அனைத்து செலவுகளையும், தமிழக அரசே ஏற்க வேண்டும், குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி திருச்சி வாமடம் பகுதியில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அங்கிருந்து கலைந்து போக செய்தனர். தொடர்ந்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்ற சிறுமியின் உறவினர்களும், பொதுமக்களும் இக்கோரிக்கைகளை, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுவாக அளித்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments