திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் 39-வது வார்டுக்கு உட்பட்ட பாலாஜி நகரின் விரிவாக்கப்பகுதியில் 26-வது தெரு சந்திப்பில் பிரதான சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள உந்துநிலைக்குழியை (Lifting Station) முற்றிலுமாக அகற்றி வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் எனவும்,
பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பிரதான சாலையை மீட்டுத்தரக்கோரி 300-க்கும் மேற்பட்டோர் கையொப்பமிட்ட கோரிக்கைமனு கடந்த (02.09.2024) அன்று மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற “மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில்” துணை ஆணையரிடம் கொடுக்கப்பட்டு பதில் கிடைக்கப்பெறவில்லை. இதனால் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் பாலாஜி நகர் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றி தர வேண்டும் என்று எதிர்பார்பில் உள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments