இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்டு 15, 2025 வார விடுமுறை இறுதியில் வருவதால் ரயில் பயணிகளின் கோரிக்கையை ஏற்று சுதந்திர தினத்தன்று திருச்சிராப்பள்ளி- மைசூர் மற்றும் திருச்சி வழியாக சென்னை எழும்பூர் – திருநெல்வேலி ஆகிய கீழ்க்கண்ட சிறப்பு ரயில்களை இயக்க கோரி கோரிக்கை விடுத்துள்ளேன்.
1. திருச்சிராப்பள்ளி – மைசூர் இடையே செல்லும் திருச்சிராப்பள்ளி சிறப்பு விரைவு இரயில் ( வழி கரூர், சேலம், பெங்களூர்)
2.திருச்சிராப்பள்ளி வழியாக சென்னை எழும்பூர் – திருநெல்வேலி இடையே செல்லும் சென்னை எழும்பூர் சிறப்பு விரைவு இரயில் ( வழி தாம்பரம், விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை, அருப்புக்கோட்டை)
சுதந்திர தினத்தன்று ரயில் பயணிகள் சிரமம் இன்றி பயணிக்க மேற்கண்ட சிறப்பு ரயில்களை இயக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளேன்.
மதுரை, திருச்சி கோட்ட மேலாளருக்கு கோரிக்கையின் கடித நகல் அனுப்பி உள்ளேன்.என்று துரைவைகோ கூறினார்
Comments